தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.9.12

வடகொரியாவை தாக்கியுள்ள சூறாவளி - 48 பேர் பலி


வடகொரியாவைக் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் தைபூன் 'பொலாவென்' காரணமாக இது வரை 48 பேர் பலியானதாகவும் 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்தும் காணாமற் போயும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தவிர இந்த தைபூன் பொ லாவென் மிகப் பெரிய சேதத்தையும் விளைவித்து ள்ளது. சுமார் 20 000 இற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்து உள்ளனர். நூற்றுக் கணக்கான மரங்கள் முறிந்து வீழ்ந்து சாலைகள்
மூடப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது.

இந்த தைபூன் காரணமாக வடகொரியா பெருமளவு பாதிக்கப் பட்ட போதும் ஜப்பானின் ஓகினாவா தீவுப் பகுதிகளில் குறைந்தளவு சேதங்களே ஏற்பட்டுள்ளன. வடகொரியாவில் ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 169 பேர் கொல்லப் பட்டிருந்தனர்.

மேலும் இம் மாதத்தில் ஏற்பட்ட தைபூன் காரணமாக  ஆயிரக் கணக்கான வீடுகள் இடிந்து வீழ்ந்ததுடன் 50 000 ஹெக்டேர் விவசாய நிலம் பாதிக்கப் பட்டிருந்தது. இதன் போது 400 பேர் காணாமற் போனதுடன் 212 000 பேர் வதிவிடம் இழந்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலமையினைச் சமாளிக்கவும் இடம் பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கும் ஐ.நா இன் உணவுப் பிரிவான WFP இன் உதவியை வடகொரியா நாடியிருந்தது.

0 கருத்துகள்: