சமீபத்தில் மத்திய கிழக்கு நாடான லிபியாவில் உள்ள அ மெரிக்க தூதரகத்தில் இஸ்லாம் சமயத்துக்கு விரோதமா ன திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ந்த தாக்குத லில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 4 அதி காரிகள் பலியாகியிருந்தனர்.இதற்குக் கண்டனம் தெரி வித்தும் மத ரீதியான மதிப்புக்களை வலியுறுத்தியும் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்டன் அழுத்தமான உரை ஒன்றை நேற்று வெள்ளி க்கிழமை நிகழ்த்தியுள்ளார்.இதில்
முஸ்லிம்களின் பெரு நாளும் ஈத் உல் ஃபித்ர்
எனும் விருந்து பற்றியும் ரம்டான் விடுமுறை பற்றியும் கூடக் குறிப்பிடப் பட்டுள்ளது. இவ்வுரையில் முக்கியமாக ஹிலாரி தெரிவி த்தது என்னவென்றால் 'உலகில் உள்ள எந்த மதத்துக்கும் அவற்றை நோகடிக் கும் திட்டங்களும் சம்பவங்களும் நிகழ்த்தப்படுவதுண்டு. ஆனால் அதற்காகக் கொதித்து எழுந்து வன்முறையைக் கையாளுவதும் அப்பாவிகளைக் கொல்வதும் ஒரு போதும் தீர்வாகாது. இதற்கு இஸ்லாமும் விதி விலக்கல்ல. என்று கூறியிருந்தார்.முஸ்லிம்களின் பெரு நாளும் ஈத் உல் ஃபித்ர்
இவர் மேலும் கூறுகையில் ' நான் தீவிரமாக நம்பும் விடயம் என்னவென்றால் உலகின் மிகச் சிறந்த சமயங்கள் அனைத்தும் எந்த இடையூறையும் விட உறுதியானவை. பல நூற்றாண்டுகளாக இது போன்ற பல இன்னல்களை அவை தாண்டி வந்துள்ளன. வன்முறையைக் கையாள்வது ஒருவரின் சமய நம்பிக்கையின் பலவீனமோ வெளிப்பாடோ அல்ல. உண்மையில் ஒருவரின் உறுதியான் மத நம்பிக்கை அசைக்க முடியாதது. இதற்கு எதிராக ஒரு சிலர் கூட்டம் கூட்டி வன்முறை மிகுந்த செயற்பாடுகளுக்குத் துணை போவார்கள் எனில் அதற்கு எதிராக மில்லியன் கணக்கான மக்கள் ஒன்று கூடி அதை எதிர்க்க வேண்டும். இதுவே யதார்த்தம்!' என்றார்.
இதேவேளை லிபியாவின் பெங்காஸியில் செவ்வாய்க்கிழமை கொல்லப் பட்ட அமெரிக்கத் தூதுவரான கிரிஸ் ஸ்டீவென்ஸ் தனது உற்ற நண்பரெனவும் அமெரிக்க மக்களுக்கு அவர் ஒரு ஹீரோ போன்றவர் என்றும் அவர் மக்களை நேசித்தவர். அவர்களுடன் சேர்ந்து உண்டவர். என்றும் அவர் தனது அர்ப்பணிப்பு மிகுந்த சேவைக்காகவே தனது இன்னுயிரையும் கொடுத்துள்ளார் எனவும் அமெரிக்காவுக்கான லிபியாவின் தூதுவர் அலி சுலெய்மான் ஹிலாரி கிளிங்டனிடம் வருத்தம் தெரிவித்ததாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நன்றி:தமிழ்மீடியா4
0 கருத்துகள்:
கருத்துரையிடுக