தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.9.12

முகமது நபி கேலி திரைப்படம் உலகம் பாரிய நெருப்பை மூட்டுமென அச்சம்


இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற திரைப்படத்திற்கான எதிர்ப்பு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் மிக மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது.அ ந்தவகையில் இன்று வெள்ளி மிக முக்கியமான நா ளாகும், மசூதிகளில் தொழுகை முடித்த பின்னர் பாரி ய ஆர்பாட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.எகிப்தி ன் தலைநகர் கெய்ரோவின் தாகிர் சதுக்கத்தில் இப் போது பல இலட்சம் மக்களைக் காணமுடிகிறது, தொழுகைக்கு பின்னர் என்ன செய்வார்கள் என்பதை முழு உலகமும் அவதானித்
தபடி இருக்கிறது.
நேற்று ஏமனில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் இறந்து 32 பேர் படுகாயமடைந்தனர்.
லிபியாவின் பெங்காஸி நடைபெற்ற ஆர்பாட்டத்திலும் தாக்குதலிலும் அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த கொன்சலேற்தர தூதுவரும் முன்று தூதரக பணியாளரும் கொல்லப்பட்டது தெரிந்ததே.
இந்தத் தாக்குதலில் லிபியாவின் தீவிரவாத அமைப்பொன்று பங்கேற்றதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது, தற்போது லிபிய பிரதமர் முஸ்தாபா அபிசாகுர் தகவல் தருகையில் கொலைச் சந்தேக நபர்களில் ஒருவரை அமெரிக்க தூதரக புகைப்படங்களை அடியொற்றி கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இறந்த தூதுவருக்கும், மற்றவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினர்க்கும் முன்னாள் டேனிஸ் பிரதமரும், தற்போதய நேட்டோ செயலருமான ஆனஸ் போ ராஸ்முசன் அனுதாபம் தெரிவித்தார்.
எகிப்து தாகிர் பிளேசில் இருந்து சற்று முன்னர் தகவல் தந்த டென்மார்க் செய்தியாளர் ஸ்ரெபன் ஜென்சன் முழு உலகமும் இன்றிரவு எகிப்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை உன்னிப்பாக அவதானிப்பதாகக் கூறினார்.
ஆர்பாட்டக்காரரை தணிவு செய்வதற்காக இஸ்லாமிய சகோதர அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் அமைதி வழியில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று செய்தி பரப்பி வருகிறார்கள், ஆனால் அதற்கு மாறாக தாகிர் பிளேஸ் வருவோருடைய முகங்கள் பெரும் சன்னதம் நிறைந்ததாக தெரிகின்றன.
இது இவ்விதமிருக்க அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கிளரி கிளின்டன் இனசன்ஸ் ஒப் முஸ்லீம் என்ற அமெச்சூர் திரைப்படத்தின் உள்ளக விடயங்களுக்கு அமெரிக்கா பொறுப்பல்ல என்று தெரிவித்தார்.
மேலும் இது அமெரிக்க அரசு தயாரித்த திரைப்படமல்ல ஓர் இஸ்ரேலிய இயக்குனர் 100 யூத நிறுவனங்களிடம் ஸ்பொன்சர் பெற்று தயாரித்த அமெச்சூர் திரைப்படம், யூ ருப், கூகுளில் வெளியாகியுள்ளது.
இதற்காக அமெரிக்கத் தூதரகங்களை தாக்கி அமெரிக்க எதிர்ப்பை கக்குவது முறையல்ல என்ற தொனி அவர் உரையில் தெறித்தது.
ஆனால் முகமது கேலிச்சித்திரம் போல இந்தத் திரைப்படம் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தவில்லை என்கின்றன மேலைத்தேய ஊடகங்கள்.
முகமட் எனப்படும் அல்லா பெண்களுடன் குறுகிய ஆசையுடன் கொள்ளும் தொடர்பு, அவர் சொல்வதற்கு கழுதைதான் காதை ஆட்டும் என்று இந்தத் திரைப்படத்தின் ரெய்லர் கேலி செய்கிறது.
உலகத்தின் மிகப்பெரிய மதம் ஒன்றை இவ்வாறு இழிமைப்படுத்துவது சரியல்ல என்ற கருத்தும் கிளரி கிளின்டனின் உரையில் காணப்படுகிறது.
லிபியா – எகிப்து போன்ற நாடுகளில் பார்க்க முடியாதபடி இந்தத் திரைப்படத்தை கூகுள் நிறுவனம் தடுத்துள்ளது.

0 கருத்துகள்: