சிரிய போர் தொடர்பாக சவுதி அரேபியா முன்வை த்து ஐ.நா பொதுக் கூட்டத்தொடரில் வியாழன்று அ னுமதிக்கப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ரஷ்யா தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.இ தற்குக் காரணமாக இத்தீர்மானம் பக்கச் சார்பானதா கவும் சிரிய அதிபர் பஷார் அல் - அஸாட்டின் அரசா ங்கத்துக்கு எதிரான கிளர்ச்சிப் படையினரின்போரை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என ரஷ்யா தெரிவித்து ள்ளது.முன்னதாக ஐ.நா
பொதுக்குழு இன்று வியாழக்கிழமை சவுதி அரேபியா முன்வைத்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த தீரிமானித்திருந்தது. இத்தீர்மா னம் வெளிப்படையாகவே சிரிய கிளர்ச்சிப் படைக்கு ஆதரவு அளிப்பது குறிப் பிடத்தக்கது. எனினும் ரஷ்யா தனது எதிர்ப்பை தனது வெளிநாட்டுத் துறை அமைச்சு மூலமாக மாஸ்கோவிலிருந்து தெரிவித்ததை அடுத்து இந்த வாக்கெடுப்பு கை விடப்பட்டது.சிரிய விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் நிலைப்பாடு என்னவென்றால் இரு தரப்பும் வன்முறைகளை ஒரே நேரத்தில் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும் என்பதாகும். எனினும் ரஷ்யா மூன்று முறை தனது வீட்டோ அதிகாரத்தை ஐ.நா இல் பாவித்து சிரிய அதிபர் பஷார் அல் அஸாட்டின் அரசு மீது சர்வதேச சமூகம் பிரயோகிக்கும் அழுத்தத்தில் இருந்து காப்பாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக