தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.8.12

மியான்மாரின் ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் இந்தியாவில் அடைக்கலம்


மியான்மாரின் சிறுபான்மையினத்தவரும் அந்நாட் டின் உத்தியோக பூர்வமாக பதிவு செய்யப்பட்ட இன ங்களில் அடங்காதவர்களுமான ரோஹிங்கியா இன முஸ்லிம் மக்கள் சிலர் அகதிகளாக சமீபத்தில் இந்தி யாவில் அடைக்கலமாகியுள்ளனர்.இதன் போது இவ ர்கள் தமது நாட்டில் கடும் சோதனைக்கு உள்ளாக்கப் பட்டதை எடுத்துக் கூறியுள்ளனர்.மியான்மாரில் வா ழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குக் குடியுரிமை கிடையாது. இவர்கள் கல்வி
கற்பதற்கும் வைத்திய சேவையைப் பெறுவதற்கும்
தடை. அதனால் இவர்கள் தம்மை இந்திய அரசிட ம் அடையாளப் படுத்திக் கொள்ள ஆவணம் எதுவும் இவர்களிடம் இல்லை. மே லும் இடம் பெயரும் போது பெண்கள் அதிகாரிகளின் பலமான தாக்குதல்களை த் தாங்க வேண்டிய சூழ்நிலையும் உள்ளது. எனும் இக்கருத்துக்களை இந்திய வழக்கறிஞர் சஹானா பசவபத்னா பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிக ளுக்கும் கூறியுள்ளார்.

இதில் மியான்மாரைச் சேர்ந்த் சகீலா பேகம் எனும் பெண்மணி ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது கணவர் கைது செய்யப்பட்டு கட்டாயக் கூலி வேலைக்கு பணிக்கப் பட்டதாகவும் தான் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்ததாகவும் கூறினார். மேலும் தனது மகன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் பின்னர் தனது உறவினர்கள் வாயிலாக அவரும் கைது செய்யப் பட்ட சேதியை அறிந்ததாகவும் தனது பேரப் பிள்ளைகள் அனாதைகளாக நடு வீதியில் நிற்பதாகவும் மேலும் கூறியுள்ளார்.

மியான்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் 8 ஆம் நூற்றாண்டிலேயே குடியேறி விட்ட போதும் மியான்மார் அரசாங்கம் இவர்களைக் குடிமக்களாக மதிப்பதில்லை. மேலும் மியான்மாரின் மேற்கு மாநிலமான ராக்கைனில் அரசால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் பல நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப் பட்டும் பலர் காணாமற் போயும் இடம் பெயர்ந்தும் உள்ளனர்.

இதனால் மனித உரிமை ஆர்வலர்கள் ஐ.நா உடனடியாக மனிதாபிமான நிவாரணப் பணியை ரோஹிங்கியா அகதிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் மியான்மார் அரசிடம் முஸ்லிம்களைக் குறி வைத்து நிகழ்த்தும் தொந்தரவுகளையும் படு கொலைகளையும் நிறுத்த சொல்ல வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வருகின்றனர்.

0 கருத்துகள்: