மன்றக் கூட்டத்தொடர் கூடவிருப்பதுப் பற்றி என்று இந்த மூன்று விஷயங்கள் பற்றி விவாதிக்க இருக்கிறார்கள்.
இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பற்றி விவாதிக்க இருக்கையில், 2013 நவம்பரில், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்புவதுத் தொடர்பான முக்கிய ஆலோசனையும் இடம்பெறும் என்றுத் தெரிகிறது. இந்த விண்கலம் விண்வெளிக்கு அனுப்புவதற்கென்று 450 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை இன்றுமாலை நடைபெறவிருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இநதிய விண்வெளிக் கழகம் வழங்கவிருப்பதாகவும் தெரிகிறது.
நவம்பரில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ, ஹரிகோட்டா விஞ்ஞானிகள் 185 பேர் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டுதான் பூமிக்கு வெகு அருகில் செவ்வாய் கிரகம் வருவதாகவும், அப்போது விண்கலம் அனுப்பினால் ஆராய்ச்சி செய்ய மிக இலகுவாக இருக்கும் என்பதால் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இநதிய விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.
2013 ம் ஆண்டுக்கு பிறகு 2018 இல் தான் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் வரும் என்பதால், 2013ம் ஆண்டை பயன்படுத்திக்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், தற்காலிகமாக நவம்பர் 20ம் திகதி என்று தீர்மானித்து இருப்பதாகவும் தெரிகிறது.
2008 ஆம் ஆண்டு இந்தியாவின் சந்திராயன் விண்கலம், ஆராய்ச்சியின் பயனாக சந்திரனில் நீர் இருப்பதன் தன்மையை அறிவித்தது உலக நாடுகளிடையே வரவேற்பை பெற்றது போன்று இந்தியாவின் தற்போதைய முயற்சிக்கும் நல்ல பலன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தை நமது விஞ்ஞானிகள் அனுப்பும் விண்கலம் 300 நாள் வலம் வருவதன் மூலம் செவ்வாய் கிரகத்தை 500 முறை வலம் வரும் என்று தெரிகிறது. இதற்கான ஒப்புதலை இன்று மாலை நடைபெறவிருக்கும் மத்திய அமைச்சரவையில் இநதிய விண்வெளிக் கழகம் வழங்கும் என்றும் தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக