தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.8.12

சிரியாவுக்கான சமதான தூதுவர் பணியில் இருந்து அன்னான் விலகல்?


அரபு லீக் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சார்பிலான மத்தியஸ்தர் பதவியில் இருந்து சிரியாவுக்கான சர்வதேச சமாதானத் தூதுவர் கோஃபி அன்னான் விலகுவதாக செய்திகள் கூறுகின்றன.தனது பதவியை மேலும் நீடிப்பதில்லை என்று அன்னான் அவர்கள் முடிவு செய்துள்ளதாக ஐநா தலைமைச் செயலர் பான் கி மூன் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.சிரியா நெருக்கடி தொடர்பில் அன்னான் ஆற்றிய பணிகளுக்கு தான் மிகுந்த நன்றியை கூறுவதாக பான் கீ மூன் கூறியுள்ளார்.


சிரியா மோதல் வலுக்கிறது
இதற்கிடையேசிரியாவின் பெரிய நகரான அலெப்போவில் இருந்து கிளர்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு இராணுவம் தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில்,அந்த நகரின் உள்ளேயும்வெளியேயும் சண்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

கிளர்ச்சிக்காரர்களின் நிலைகள் மீது துப்பாக்கி பொருத்திய ஹெலிக்கொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுவந்த விமானப் படைத்தளத்தின் மீதுதாம் கைப்பற்றிய சிரிய இராணுவத்தின் தாங்கி மூலம் கிளர்ச்சிக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதேவேளை டமாஸ்கஸில் 70 கும் அதிகமான ஆட்களை ஒட்டுமொத்தப் படுகொலை செய்ததாக அரசாங்கப் படையினர் மீதும்ஆயுதக்குழுக்கள் மீதும் எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தலைநகரிலும் சண்டை தொடருகிறது. முன்னதாக அலெப்போவில் சிறைக் கைதிகளைக் கொன்றதாக கிளர்ச்சிக்கார ஆயுதக்குழுவினர் மீது எதிர்த்தரப்பைச் சேர்ந்த சிரியாவின் தேசியக் கவுன்சில் குற்றஞ்சாட்டியிருந்தது.     நன்றி:தமிழன்

0 கருத்துகள்: