தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.8.12

கருப்பை தாங்கும் வலையால் உயிராபத்து


பெண்களின் கருப்பை இறக்கத்தை தடுக்க வைக்கப் படும் கருப்பை தாங்கும் வலை உயிராபத்து நிறைந் தது என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.சத்தி ரசிகிச்சையின் பின்னர் கருப்பையில் துணையாக வைக்கப்படும் இந்த வலை நாளாவட்டத்தில் சிறு நீர்குழாயை, கார்ப்பப்பையை வெட்டி சேதப்படுத்து கிறது.குடும்ப வாழ்வில் ஈடுபடும்போதும் இது கர்ப ப்பையை வெட்டி இரத்தக் கசிவை உண்டுபண்ணி மரண ஆபத்தை உருவாக்குகிறது.சுமார் 20 வீதமா னவர்கள் பாதிப்படைந்து
ள்ளார்கள் சில மரணங்களும் இடம் பெற்றுள்ளன.
பெனலொக் எனப்படும் விசேட சீமெந்து கலவை கொண்ட இந்த நெற்றை பாவிப்பது பல்வேறு தவறுகளை ஏற்படுத்துகிறது என்று கேலேவ் வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியக் கலாநிதி குணார் லுய்ச எச்சரித்துள்ளார்.
இதன் காரணமாக டென்மார்க்கில் இந்த வலை பொருத்திய பெண்கள் அனைவரும் மறுபடியும் வைத்தியசாலை அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பொருத்தப்பட்ட நெற்றால் ஏற்பட்ட பாதிப்புக்களை பரிசோதனை செய்யவுள்ளனர்.
இந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் பார்வைக்கு வந்துள்ளது.

0 கருத்துகள்: