ஆப்கானிஸ்தான் போர்க்களம் சென்ற அமெரிக்கப் படைகள் சந்தித்த மரணங்கள் தொடர்பாக வெளியா கியிருக்கும் கணிப்புக்கள் இன்றைய அதிகாலை ஐ ரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.அமெரி க்காவில் இருந்து வெளிவரும் நியூயோர்க் டைம்ஸ் இதுவரை ஆப்கானில் இறந்த அமெரிக்கப்படைகளி ன் தொகை 2000 என்று அறிவித்துள்ளது.அமெரிக்கப் படைத்துறை வெளியிட்ட ஆய்வறிக்கையில் முதல் ஒன்பது ஆண்டு காலங்களில் மரணித்த படையினர் 1000 பேர் என்றும், அடுத்து
வந்த ஓராண்டு காலத்தில் இறந்தவர்கள் தொகை மேலதிகமான 1000 என்றும் கூறுகிறது.
கடந்த ஓராண்டு காலத்தில் இவ்வளவு பெருந்தொகை இழப்பை அமெரிக்கப் படைகள் சந்திக்கக் காரணமென்ன என்ற கேள்விக்கும் பென்ரகன் பதிலளித்துள்ளது.
ஆப்கான் போர்க்களத்திற்கு மேலும் அதிகமான படைகளை அனுப்பினால் இழப்புக்களை குறைக்கலாம், தாக்குதல்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்ற இராணுவ யோசனை அதிபர் ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் வழங்கப்பட்டது.
இதன் பிரகாரம் 33.000 படைகள் மேலதிகமாக அனுப்பி வைக்கப்பட்டன, ஆனால் இதன் விளைவு எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
போர்க்களத்தில் அதிகமாக படைகளை பரவும்போது இலகுவாக அவர்கள் மீது தாக்குதல் நடாத்தும் வாய்ப்பை அது எதிரிகளுக்கு கொடும் என்ற கருத்து அங்கு நிஜமாகவிட்டது.
மலைகளும், வெளிகளும் நிறைந்த ஆப்கானில் படைகளின் அதிகரிப்பு கடலில் புளி கரைத்த வேலை என்பதை அமெரிக்கர்கள் தாமதமாகவே உணர்ந்துள்ளனர்.
ஆக, அதிக படைகளை அனுப்புவதால் பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம் என்ற கருத்தியலில் விழுந்துள்ள அடியாக இந்த 1000 மரணங்களும் இருந்துள்ளன.
அதேவேளை ஈரான் மீது போர் நடாத்துவதற்கு மேலை நாடுகள் முயற்சி எடுக்க எடுக்க ஆப்கானில் தலபான்களின் பலம் அதிகரிப்பதை அமெரிக்கா சுட்டிக்காட்டவில்லை.
இந்த ஆண்டு ஜூலை மாதம் ஈராக்கில் கூட வரலாறு காணாத இழப்புக்களும் தாக்குதல்களும் நடந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
அமெரிக்க எதிர்ப்பு தாலிபான்களை நீரூற்றி வளர்ப்பதால் நிலமையை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது கடினமாக உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக