தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.8.12

கூகுளின் உதவியுடன் புற்றுநோய் பற்றிய உயர் ஆராய்ச்சிகளை நடத்தும் அமெரிக்க சிறுவன்


அமெரிக்காவில் 15 வயது மட்டுமே நிரம்பிய மாண வன் ஒருவன் கணைய புற்றுநோயை இலகுவாக கண்டறிய கூடிய சோதனையை உருவாக்கியுள்ளா ன்.இச்சோதனை இதற்கு முன் புற்று நோய் நிபுணர்க ள் கண்டறிந்ததை விட 168 மடங்கு வேகமாகவும் கோல்ட் அளவீடு எனும் முந்தைய சோதனையினை விட செலவு குறைவானதாகவும் உள்ளது இதன் சிற ப்பம்சம் ஆகும்.அமெரிக்காவில் வசித்து வரும் ஜக் அன்ட்ரக்கா எனும் உயர்தரப் பள்ளி மாணவனான இந்த இளைஞன், பனிச்சறுக்கிலும் அமெரிக்காவின் பிரபல டிவி
நிகழ்ச்சியா (Glee) இலும் விருப்பமுடையவன். இவனுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உலகில் உள்ள மிக முக்கியமான புற்றுநோய் சோதனைக் கூடங்களுடன் கூகிள் வழியாக இணையத்தில் இணைந்து மிகப் பெரிய மருத்துவ நிபுணர்களுடன் விசேட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றான்.

இதன் ஒரு கட்டமாகவே தற்போது தனது முயற்சி மூலம் கணையப் புற்று நோயைக் கண்டறியக் கூடிய சோதனையினை உருவாக்கியுள்ளான்.  இதனையடுத்து இவன் இச்சோதனையை மருத்துவர்கள் முன் தெளிவாக நிகழ்த்திக் காட்டுவதற்கு விண்ணப்பித்துள்ளதுடன் அமெரிக்காவின் பல்ட்டிமோர் நகரிலுள்ள ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் மேலதிக ஆராய்ச்சியைச் செய்வதற்கும் திட்டமிட்டுள்ளான். இந்த சோதனை முயற்சிக்கான தகவல்களையும் இவன் ஆன்லைன் வழி கூகிளை உபயோகித்தே தேடி கற்றுள்ளான்.  மேலும் இந்தப் புற்று நோய் ஆராய்ச்சிக்கு தேவையான அறிவை தேடு பொறிகள், இலவச ஆன்லைன் விஞ்ஞான பேப்பர்கள், மற்றும் கருவிகள் மூலமாகவே வளர்த்துள்ளான்.

அமெரிக்காவின் மேரிலாண்டை தாயகமாக கொண்டுள்ள இம்மாணவன் ஏற்கனவே இண்டெல் கம்பனியின் சர்வதேச விஞ்ஞான மற்றும் பொறியியல் கண்காட்சி ஒன்றில் மே மாதம் தனது படைப்பு ஒன்றிட்காக $75,000 டாலர்கள் பரிசு வென்றுள்ளான்.
வீடியோ : BBC

0 கருத்துகள்: