தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.8.12

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தளபதி பயணிக்க இருந்த விமானம் மீது ஏவுகணைத் தாக்குதல்


ஆப்கானிஸ்தானில் உள்ள கிளர்ச்சிக் குழுவினர்,  காபூல் நகரின் வடக்கே உள்ள நேட்டோ கூட்டுப் படையினர் பயன்படுத்தும் 'பக்ரம்' விமானத்தளத்தி ல்நிறுத்தி வைக்கப் பட்டிருந்த C-17 ரக பயணிகள் விமானத்தின் மீது இரு ஏவுகணைகளை ஏவி இன்று செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளனர். இத் தாக்குதல் மூத்த அமெரிக்க படைத்தளபதியான 'மார் ட்டின் டெம்ப்சேய்' இலக்கு வைத்து
நடத்தப்பட்டுள் ளது.எனினும் அதிர்ஷ்டவசமாக ஏவுகணைத்தாக்குதல் நிகழ்ந்த  போது அவர் வேறொரு விமானத்தில் பயணித்ததால் உயிர் பிழைத்தார். இந்த தாக்குதலின் காரணமாக பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தரையிலிருந்த இரு அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஏவுகணைகளால் தாக்கப் பட்ட விமானம் டெம்ப்சே மற்றும் அவரது அதிகாரிகளால் குறுந்தூர பயணங்களுக்குத் தற்காலிகமாக அடிக்கடி பாவிக்கப் பட்டு வந்தது. மேலும் தாக்குதலின் போது இந்த விமானம் மட்டுமன்றி அருகிலிருந்த ஹெலிகாப்டர் ஒன்றும் சேதமடைந்துள்ளது. இதைத் தவிர இத்தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இதே போன்று தலிபான்கள் நடத்திய இன்னொரு தாக்குதலில் 10 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இச்சம்பவம் நிகழ்ந்த 'பக்ரம்' நகரம் சுமாற் 30 000 இராணுவத்தினராலும் மக்கள் தளபதிகளாலு நிரம்பியுள்ளது.

0 கருத்துகள்: