தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.8.12

சிரிய போராளிகளுக்கு மேலை நாடுகள் மர்மமாக உதவுகின்றன.


சிரிய அதிபர் ஆஸாட்டின் படைகளுக்கு எதிராக ஆ யுதம் தூக்கியுள்ள போராளிகளுக்கு மேலை நாடுக ள் உளவுத் தகவல்களை பரிமாறி வருவதாக ஜேர்ம னியில் இருந்து வெளிவரும் பிளிட்ஸ் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.ஆஸாட்டின் படைகள் நகர்வதை ஜேர்மனிய உளவுப்பிரிவினர் உளவறிந்து துருக்கியில் உள்ள நேட்டோ கட்டளையகத்திற்கு வழங்குகிறார்கள், அங்கிருந்து அமெரிக்க உளவுப்பி ரிவுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் வழியாக போராளிகளுக்கு போவதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய தரைக்கடல் பகுதியில்
நிலை கொண்டுள்ள பி.என்.டி ஜேர்மனிய உளவுப் பிரிவினர் அங்கிருந்து 600 கி.மீ தூரம் சிரியாவிற்குள் நடப்பதை துல்லியமாக அறிந்து தகவல் வழங்குகிறார்கள்.
சிறீலங்கா படைகளுக்கு புலிகளின் நகர்வுகளை உளவறிந்து மேலை நாடுகள் வழங்கியது போலவே சிரிய படைகளின் பெரு நகர்வு இப்போது சிரிய போராளிகளுக்கு வழங்கப்படுகிறது.
படைகளின் நகர்வு தகவல் கிடைத்தால் போராளிகளை ஆஸாட் மடக்குவது இலகுவான காரியமாக அமையாது, அதனால்தான் பொது மக்கள் தலைகளை அறுத்து கோபம் தணிகிறது ஆஸாட்டின் படைகள்.

0 கருத்துகள்: