தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.8.12

தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு நான்கு தங்க பதக்கங்களை வென்று கொடுத்த 86 வயது முதியவர்


இலங்கையில் கொழும்பில் நடந்த முதியவர்களுக் கான சர்வதேச தடகள போட்டியில் தமிழகத்தை சே ர்ந்த 86 வயது முதியவர் இந்தியாவுக்காக 4 தங்க பத க்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.திருத் தணியை சேர்ந்த பி.நடேச ரெட்டி (86) எனும் இம்மு தியவர் 85-89 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவி ல் பங்கேற்று சங்கிலி குண்டு எறிதல், வட்டு எறித ல், குண்டு எறிதல், ஈட்டி
எறிதல் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென் றுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை நேரு மைதானத்தில் நடந்த மாவட்டங்களுக்கு இடையிலான முதியவர்கள் தடகள போட்டியில் கலந்து கொண்டும் குறித்த போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். அடுத்து சீனாவில் நடைபெற போகும் ஆசிய தடகள போட்டிகளில் பங்கேற்க போவதாக கூறியுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளால தடகள போட்டளில் கலந்து கொண்டு வரும் இவர், இதுவரை 65 பதக்கங்களை வென்றுள்ளார். எனது உடலில் சக்தி இருக்கும் வரை விளையாட போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவரது முயற்சியை பாராட்டி தமிழக அரசு அவருக்கு சிறந்த விளையாட்டு வீரர் எனும் கௌரவ விருதொன்றையும் வழங்கியுள்ளது.

0 கருத்துகள்: