தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.7.12

நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக்கியது ஏன்? : விளக்கம் கோரும் மதுரை நீதிமன்றம்


மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்தியான ந்தா நியமனத்துக்கு எதிரான வழக்கு மதுரை நீதிமன் றத்தில் விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள், நித்தியானந்தா, மதுரை ஆதீனம் அருண கிரிநாதர்  ஆகியோர் நித்தியானந்தாவின் நியமனத் துக்கு விளக்கம் தரவேண்டும் என்று மதுரை நீதிமன் றம் ஆணையிட்டுள்ளதாகத் தெரிகிறது.மதுரை இ ளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப் பட்டது செல்லாது என்றும், அதற்கு
உண்டான அடிப்படைத் தகுதியே நித்தியானந்தா வுக்கு இல்லை என்றும் மதுரை வழக்கறிஞர் மணிவாசகம் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார். அந்த மனுவின் மீதான பதில் மனுத் தாக்கல் செய்வேண்டும் என்று மதுரை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நித்தியானந்தா வேண்டுமென்றே வாங்கவில்லை என்பதால் நாளிதழ்களில் விளம்பரம் செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

     இதற்கிடையில் மனுவின் மீதான விசாரணையில் நித்தியானந்தா தரப்பு வழக்கறிஞர் இன்று ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை ஆதீனத்தின்  இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமனம் செய்ததற்கு விளக்கம் கேட்டனர். ஆனால் விளக்கம் அளிக்க சிறிது காலம் அவகாசம் வேண்டுமென நித்தி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதால், கடைசி தடவையாக எதிர்வரும் 7 ம திகதி வரை அவகாசம் வழங்கித் தீர்ப்பளித்துள்ளனர் மதுரை நீதிமன்ற நீதிபதிகள். அதன்படி, நித்தியானந்தா, அருணகிரிநாதர் இருவருமே விளக்கம் தரவேண்டும்  என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

0 கருத்துகள்: