தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.7.12

ஏன் புலிகளைத் தடை செய்யக்கூடாது? விளக்கம் தருக : இந்தியா


சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது?  எனின் அதற்கான விளக்கம் என்ன?என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு டில்லியி ல் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடு வர் மன்ற பதிவாளர் அனில்குமார் கவுசல் விடுத லைப் புலிகள் அமைப்பிடம் விளக்கஅறிக்கை கோரி யுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று இந்த அறிவிப்பு வெ ளியாகியுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது : 196 7ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவைச்சேர்ந்த (2) உட்பிரிவின் கீழ், உங்களுடைய இயக்கத்தை சட்டவிரோதமான இயக்கம் என்று ஏன் அறிவிக்கக்கூடாது என்பதற்கு ம், இத்தகைய அறிவிப்பை உறுதி செய்கின்ற உத்தர வு ஒன்றினை ஏன் பிறப்பி
க்கக்கூடாது என்பதற்கும் காரண விளக்கத்தை இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
சட்டவிரோதமான இயக்கமாக அறிவிக்கக்கூடாது என்பதற்கான மறுப்போ அல்லது பதிலோ இருப்பின் 30 நாள்களுக்குள் டில்லியில் ஷெர்சா சாலையில் உள்ள உயர்நீதிமன்ற மருத்துவப்பிரிவு கட்டிடம், 3-வது தளத்தில் அமைந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) நடுவர் மன்றப் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம். மறுப்புரை, பதில், ஆவணங்கள் ஆகியவை வட்டார மொழியில் இருந்தால் அதன் உண்மையான ஆங்கில மொழி பெயர்ப்பும் அத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
இதுதொடர்பான கூடுதல் நடவடிக்கைகளுக்காக டெல்லி உயர்நீதிமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள நீதிமன்றம் எண்: 20இல் அடுத்த மாதம் 27ஆம் திகதி பிற்பகல் உரிய சட்டத்தரணி மூலம் நடுவர் மன்றத்தில் முன்னிலையாகுமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்: