ஜேய் கொக்ரானே எனும் நபர் நேற்று இரவு கன டாவிலுள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகே உள் ள ஸ்கைலோன் தூபி மற்றும் ஹில்ட்டொன் ஃபால்ஸ்வீவ் எனும் இரு கட்டடங்களுக்கு இ டையே இணைக்கப்பட்ட கயிற்றில் சுமார் 1300 அடி உயரத்தில்30 நிமிடங்களுக்கு அந்தரத்தில் நடந்து சென்று உலக சாதனை நிகழ்த்தியுள்ளா ர்.68 வயதான இந்நபர் இது போன்று மேலும் 81 ஆபத்தான நடைகளை
மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இவரின் இச்சாதனை முயற்சி காரணமாக இவர் வான இளவரசன் எனப் பொருள் படும் Prince of the Air என அழைக்கப் படுகின்றார். இவர் கயிற்றின் மீது நடந்து ஹோட்டல் டவரை பத்திரமாக வந்தடைந்த பின்னர் ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கையில் 'இச்சாதனை மிகக் கடினமானது என்பதுடன் இது இலகு என்றால் யார் வேண்டுமானாலும் இவ்வாறு முயற்சிக்க வாய்ப்பு உண்டு என்று கூறியுள்ளார்.இன்று சுமார் 600 அடி உயரத்தில் இவர் நடந்து சென்று படைத்த சாதனையை மிகப் பெரிய மக்கள் கூட்டம் கீழே இருந்து அவதானித்து இவரை உற்சாகப் படுத்தியது. இவரது இச்சாதனை வட அமெரிக்க கட்டடங்களுக்கு இடையேயான கயிறு மீது நடக்கும் போட்டியில் முதலாவதாகும். எனினும் ஏனைய வான் நடையாளர்கள் (Sky walkers) போல் அல்லாமல் கயிற்றுக்கு கீழே வலை அமைக்காமலும் பாதுகாப்பு
அங்கிகளை அணியாமலும் இவர் அதிசிரத்தை எடுத்து இச்சாதனையை நிகழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக