தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.7.12

நித்தியானந்தாவின் அறக்கட்டளை மோசடி செய்துள்ளது : கலிபோர்னிய நீதிமன்றம் தீர்ப்பு


அமெரிக்காவில் இயங்கி வரும் நித்தியானந்தாவின் அறக்கட்டளை ஒரு மோசடியான நிறுவனமே என கலிபோர்னிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இந்திய வம்சாவளியை சேர்த பாபட்லால் என்பவர் கலிபோ ர்னிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புகார் மனுவி ல், நித்தியானந்தா அறக்கட்டளைக்கு, வேத பல்க லைக்கழகம் தொடங்க தான் கொடுத்த ரூ.10 கோடி நன்கொடையை அவர் மோசடி செய்துவிட்டதாக கு ற்றம் சுமத்தியிருந்தார். 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நித்தியான ந்தா அறக்கட்டளை அமெரிக்க நிதிச்சட்டத்தின் படி செயற்படவில்லை. மோசடியாகவே செயற்பட்டிருக்கிறது. எனவே உடனடியாக பாபட்லாலிடம் வாங்கிய நிதியை திருப்பி செலுத்த வேண்டும். இந்த வழக்கின் தண்டனை விபரம் 19ம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

இவ்விவகாரத்தை அடுத்து நித்தியானந்தாவுக்கு எதிரான போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை கண்ணன் கூறும் போது இனியாவது மதுரை ஆதீனம் சுதாகரித்து கொண்டு இளைய ஆதீனம் பட்டத்தை திரும்ப பெறவேண்டும். அப்போது தான் மதுரை ஆதீனத்தின் கௌரவம் காப்பாற்றப்படும் என்றார்.

0 கருத்துகள்: