தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.7.12

42 வருட சர்வாதிகாரத்திற்கு பின் நேற்று லிபியாவில் தேர்தல்


கேணல் கடாபியின் 42 வருட கால சர்வாதிகார ஆட்சியின் பின்னர் நேற்று லிபியாவில் தேர்தல் நடக்கிறது.மொத்தம் 100 கட்சிகள் 3700 வேட்பாள ர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.என்ன கருத்தைச் சொல்வது யாரைத் தேர்வு செய்வது என் ற குழப்பமான நிலையில் வாக்களித்துக் கொண்டிரு க்கிறார்கள் லிபிய மக்கள்.போட்டியிடும் 100 கட்சிக ளில் எதற்குமே உருப்படியான தேர்தல் அறிக்கை கிடையாது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கட்டவுட்டுக்களே வெகு
காலதாமதமாகவே தொங்கவிடப்பட்டுள்ளன.
அதேநேரம் பெங்காஸி பகுதியில் உலங்குவானூர்திகளில் இருந்து துண்டுப் பிரசுரங்களும், தேர்தல் வாக்குச் சீட்டுக்களும் வீசப்பட்டு தேர்தலை பகிஷ்கரிக்கும்படி கோரிக்கை விடப்பட்டுள்ளது இதன் பின்னணியில் இருப்பது யாரென தெரியவில்லை.
லிபியாவின் மொத்த சனத்தொகையான 2.3 மில்லியனில் 80 வீதம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளது.
தலைநகர் திரிப்போலியில் மட்டும் தேர்தல் பரபரப்பாக உள்ளது.
முன்னர் கடாபி தேர்தலை நடாத்தியுள்ளார் அப்போது அவருடைய கட்சிக்கு 99 வீத வாக்குகள் விழும் அதைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள், அவருக்கும் அது பற்றிய கவலைகள் இருந்தது கிடையாது.
ஊழல் ஜனநாயகம் மூலம் ஆட்சி நடாத்துவார், வாக்களிக்கும் பெட்டிக்குள் மனம்போல அவருடைய கட்சி வாக்குகளை அள்ளிப் போடும்.
இந்தக் கதை முடிந்து தற்போது இன்னொரு கதை ஆரம்பித்துள்ளது.
இப்போது வாக்களித்துவிட்டு வரும் பலர் தமக்கு தெரிந்த அயலவருக்கு வாக்களித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
எவ்வாறாயினும் ஒரு சர்வாதிகார நாடு முதல் தடவையாக ஜனநாயகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் கால் பதிக்கிறது.

0 கருத்துகள்: