தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.7.12

அரபாத் படுகொலை அரபு லீக் அவசர அழைப்பு


பொலோனியம் நஞ்சூட்டி பாலஸ்தீன விடுதலை அமைப்பின் தலைவர் யாசர் அரபாத் கொல்லப்பட் டிருக்கலாம் என்று வெளியான செய்தி மத்திய கிழ க்கு வட்டகையிலும் அரபு நாடுகளிலும் அணு குண் டு விழுந்ததைப் போன்ற அதிர்வலைகளை ஏற்படுத் தி வருகிறது.இந்த விவகாரம் தொடர்பாக உடனடி யாக விவாதிக்கப்பட வேண்டுமென ரூனிசியா நாட் டின் வெளிநாட்டு அமைச்சர் ராபிக் அப்டி சலாம் அ ழைப்பு விடுத்துள்ளார்.அரபாத் மரணம் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுக்களை நடாத்த அரபு லீக்கின் வெளிநாட்டு அமைச்சர்களும், சர்வதேச விவகாரப் பிரிவும் உடனடியாக கூட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரபாத் கொலை செய்யப்பட்டது உண்மையானால் பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலின் பக்கம் நிற்க முடியாத நிலையை அமெரிக்கா அடையும், இது பாலஸ்தீன பிரச்சனையின் முக்கிய திருப்பு முனையாக அமையும்.
மேலும் பொலோனியம் விஷம் வைக்குமளவுக்கு இஸ்ரேல் போயிருக்குமானால் இஸ்ரேலுடனான பழைய ஒப்பந்தத்தை புதுப்பிக்க முடியாத நிலையை எகிப்திய அதிபர் இயல்பாகவே அடைவார்.
பாலஸ்தீனப் பிரச்சனையின் பிரதான இரிசு திரும்ப ஆரம்பித்துள்ளது.

0 கருத்துகள்: