கடவுளின் துகளான ‘ஹிக்ஸ் போசான்’ கண்டுபிடிப்பில் வெற்றி கண்ட விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நோபல் பரிசுக்கு உரியவர் என்று இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் புகழாரம் சூட்டியுள்ளார். கடவுளின் துகள் என்று சொல்லப்படும் ஹிக்ஸ் போசானை
கண்டுபிடித்து விட்டதாக ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் (செர்ன்) விஞ்ஞானிகள் நேற்று முன்தினம் அறிவித்தனர். இயற்பியல் துறையில் மிகப் பெரிய சாதனையான இந்த கண்டுபிடிப்பை பாராட்டி உலகம் முழுவதிலும் இருந்து செர்ன் மையத்துக்கு வாழ்த்துகள் குவிகின்றன.ஹிக்ஸ் போசான் அணுத் துகள் கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு வகித்தவர் பீட்டர் வேர் ஹிக்ஸ் என்ற இயற்பியல் விஞ்ஞானி. இங்கிலாந்தின் நியூகேசில் பகுதியின் டைன் நகரில் 29 மே 1929ல் பிறந்தவர். இப்போது வயது 83. கடவுளின் துகளை கண்டறியும் பல்வேறு ஆராய்ச்சி குழுக்களில் பணியாற்றிய பிறகு ஐரோப்பிய அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் (செர்ன்) இணைந்தார் ஹிக்ஸ்.
அவர் 2011 டிசம்பரில் ‘லார்ஜ் ஹார்டன் கொலிடர்’ என்ற புரோட்டான் (எல்.எச்.சி.) அதிவேக மோதல் ஆராய்ச்சியை தொடங்குவதாக அறிவித்தார். 6 மாதங்களுக்கு பிறகு அந்த ஆராய்ச்சி முடிவில்தான் நேற்று முன்தினம் ஹிக்ஸ் போசான் துகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் முயற்சியை கைவிடாமல் முடித்து காட்டிய ஹிக்சுக்கு நோபல் பரிசு அளிக்க வேண்டும் என்று சக இயற்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் நேற்று வலியுறுத்தினார்.
100 டாலர் தோல்வி
இப்போது 70 வயதாகும் ஹாக்கிங், 34 வயதில் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது எல்.எச்.சி. முறையை தெரிவித்தார். அப்போது அவர், கடவுளின் துகளை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் கார்டன் கேனிடம் 100 டாலர் பந்தயம் கட்டினார். இப்போது பந்தயத்தில் 100 டாலரை தோற்று விட்டதாக நேற்று ஹாக்கிங் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக