அமெரிக்க பொருளாதாரம் மாபெரும் சரிவைச் சந்திக்க உள்ளது, அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இது தொடர்பாக யூரோ பசிபிக் கேபிடல் நிதி ஆலோசனை நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், அமெரிக்க நிதித்துறை வல்லுநருமான பீட்டர் ஸ்சீஃப் கூறியதாவது, அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட இருக்கும் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ள அமெரிக்க முதலீட்டார்கள்
தயாராக இருக்க வேண்டும்.இது 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவைவிட மோசமானதாக இருக்கும். இனிமேல்தான் மிகக் கஷ்டமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க இருக்கிறோம்.
தயாராக இருக்க வேண்டும்.இது 2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சரிவைவிட மோசமானதாக இருக்கும். இனிமேல்தான் மிகக் கஷ்டமான பொருளாதார நெருக்கடியை சந்திக்க இருக்கிறோம்.
அமெரிக்காவில் வட்டி விகிதம் மிகக் குறைவாக இருப்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவதன் மூலம் அதிக நெருக்கடி நிலையில் இருந்து மிகச் சிறிய அளவில் மீள முடியும்.
பொருளாதார வீழ்ச்சியின் உச்சம் எப்படி இருக்கும் என்பதை இனிதான் உணர இருக்கிறோம். வங்கிகள் வீழ்ச்சியடைவதையும் தடுக்க முடியாது.
நிலைமையைச் சமாளிக்க அரசு அதிக அளவு நாணயங்களை அச்சிட்டாலும் பிரச்னை எளிதில் தீர்ந்துவிடாது. பொருளாதாரம் உச்சத்தில் இருந்த போது அதனை மகிழ்ச்சியாக அனுபவித்தோம். இப்போது வீழ்ச்சி நிலை ஏற்படும்போது அதனையும் கஷ்டப்பட்டு சமாளித்துதான் ஆக வேண்டும்.
பொருளாதார வீழ்ச்சி காலகட்டத்தில் ஒவ்வொரு தனி நபரும் நெருக்கடியை சந்திக்க வேண்டியது வரும். வட்டி விகித உயர்வு உள்ளிட்ட கசப்பு மருந்தை அனைவரும் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இதேபோன்ற கருத்தை வேறு சில பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக