தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.7.12

பெஸ்ட் பேக்கரி வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை


2002ஆம் ஆண்டு நடைபெற்ற பெஸ்ட் பேக்கரி எரிப் பு வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியு ம் மீதம் 5 பேரை விடுதலை செய்தும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததுகடந்த 2002ஆம் ஆ ண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறையின் போ து வடோடராவில் உள்ள பெஸ்ட் பேக்கரியின் முன் திரண்ட இந்துத்துவ வன்முறையாளர்கள் அந்தக் கடையில் பணியாளர்கள் இருந்த நிலையிலேயே
தீயிட்டுக் கொழுத்தியது. இதில் 14 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.

இதுதொடர்பான விசாரணை குஜராத் மாநிலத்திலிருந்து மாற்றப்பட்டு மும்பையில் நடைபெற்றது. 17 பேர் குற்றவாளிகளாக இணைக்கப்பட்ட அந்த வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 9 பேரும் தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்தது. போதிய ஆதாரங்கள் இல்லாததால் 5 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் மீதம் உள்ள 4 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை தாங்கள் உறுதி செய்வதாகவும் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.எம். கானடே மற்றும் பி.டி. கோடே ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பெஸ்ட் பேக்கரி எரிப்பில் காயமுற்றிருந்த 4 பேர் இந்த வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கின் பெரும் திருப்பமாக, சாட்சகளில் ஒருவரான யாஸ்மீன் சேக் என்பவர், சமூக சேவகி டீஸ்டா செடல்வாட் தன்னை தவறாக வழிநடத்தியதால்தான் தான் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளித்தேன் என்று பிறழ்சாட்சியம் அளித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மேல்முறையீடுகள் செய்யப்படுமாயின் அப்போது தம்மையும் ஒரு வாதியாகச் சேர்க்குமாறு சமூக சேவகி டீஸ்டா செடல்வாட் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீதான தீர்ப்பு பின்னர் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: