பாலிவுட் நாயகர்களுள் ஒருவரான ஆமிர்கான் சமுதாயத்தில் காணப்படும் முறைகேடுகளை அலசி ஆராயும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை 'சத்ய மேவ ஜெயதே' என்ற பெயரில் காட்சிப்படுத்தி வருகின்றார்.தனது முதல் நிகழ்ச்சியில் சிறுவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காண்பித்து பாராட்டு பெற்ற ஆமிர்கான், மருத்துவத்தின் பெயரால் மருத்துவர்கள் கொள்ளை அடிப்பதாக அண்மைக் காட்சி ஒன்றில் பகிரங்கப்படுத்தினார். மருத்துவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக ஆமிர்கானின்
அந்தக் காட்சிப்படுத்தல் அமைந்ததாக இந்திய மருத்துவச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஆமிர்கான் தனது நிகழ்ச்சியில் "மருத்துவர்கள் வியாபார எண்ணத்துடன் செயல்படுகிறார்கள். நோயாளிகள் யாராவது சாதாரண காயத்துடன் வந்தால்கூட அவர்களைப் பயமுறுத்தி அறுவை செய்தால்தான் குணமாகும் என்று கூறி காசுபணம் அள்ளுகிறார்கள்" என்பது போன்று குறிப்பிட்டிருந்தார். ஆமிர்கானின் இந்தக் கருத்து இந்தியா முழுவதும் மருத்துவர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
"தனது இந்தக் கருத்துக்கு உடனடியாக ஆமிர்கான் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று இந்திய மருத்துவச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய மருத்துவச் சங்கப்
பொதுச் செயலாளர் டி.ஆர்.ராய் , "ஆமிர்கான் மீது எங்களுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை இருக்கிறது. ஆனால் தொலைக்காட்சித் தொடரில் மருத்துவர்களைப் பற்றி அவர் உண்மைக்கு மாறான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது"
என்றார்.
டெல்லி மருத்துவச் சங்க தலைவர் ஹரிஸ் குப்தா கூறும்போது, "மருத்துவர்களையும், மருத்துவத் தொழிலையும் ஆமிர்கான் தரம் தாழ்த்தி எடை போட்டிருக்கிறார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் மருத்துவர்கள் போராட்டத்தில் குதிப்பார்கள். இந்திய மருத்துவச் சங்கமும், டெல்லி மருத்துவச் சங்கமும் இணைந்து அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக