தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.6.12

இஸ்ரேலை மீண்டும் எச்சரிக்கும் ஈரான்


எங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடியாக மாபெரும் விளைவை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என இஸ்ரேல், மேற்குலக நாடுகள் சந்தேகம் கொண்டுள்ளதுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.இதன் காரணமாக தாங்கள் பாதிக்கப்படவில்லை என்றும், தங்களது மனத்துணிவு அதிகரித்துள்ளது என்றும் ஈரான் நாட்டுத் தலைவரான
அயடோலா அலி கமெனி கூறியுள்ளார்.இதுகுறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அயடோலா,
ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டதற்கான எந்த அடையாளமோ, ஆதாரமோ இல்லாததால் ஈரானுக்கு எல்லா சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக எங்கள் பரம எதிரிகளான அமெரிக்காவும், இஸ்ரேலும் எங்களை அவமதித்து வருகின்றன.
இஸ்ரேலியர்கள், ஈரான் மீது தாக்குதல் நடத்த முனைந்தால் அது இஸ்ரேல் மீது இடியாக விழும். சர்வதேச அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், ஈரானை ஒரு ஆபத்தான நாடாகவும் சித்தரித்து வருகின்றன.
இது ஒரு பொய்யை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய பொய்யான தகவல்களால் அவர்கள் ஈரானுக்கு துரோகம் செய்கின்றனர் என்று கூறினார்.
ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பேசிய அயடோலா, ஈரான் மக்கள் இதயங்களில் சர்வதேச சமூகம் மீதான கசப்பு மற்றும் வெறுப்புணர்வு ஆழமாகி வருவது மட்டுமே பொருளாதாரத் தடையால் ஏற்பட்டுள்ள தாக்கம் என்றும் கூறினார்.

0 கருத்துகள்: