தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.12

ஆயுதத்துடன் சிரியாவுக்குள் போக வேண்டாம் ரஸ்யா அலறல்

சிரியாவில் உள்ள மஸாராட், அல்குய்யர் நகரங்களில் சிரியப்படைகளால் கொன்று வீசப்பட்ட 55 பேருடைய உடலங்களை பார்க்க சென்ற ஐ.நா கண்காணிப்பாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. நிராயு தபாணிகளாக சென்ற கண்காணிப்பாளர் மீது நடாத்தப் பட்ட தாக்குதலானது சிரிய அதிபர் ஆட்சியில் இருக்கு ம் லைசென்சை பறிமுதல் செய்துவிட்டதாக பான் கி மூன் நேற்று ஐ.நா பொதுச்சபையில் அறிவித்தார்.சிரி யப் படைகளின் இந்தச் செயலானது அதிர்ச்சி..
பெருந் துயரம் என்றும் அவர் ஐ.நாபொதுச்சபையில் பகிரங்கமாக பிரகடனம் செய்தார்.அதேவேளை சிரிய படைகளின் நயவஞ்சக தாக்குதல் தொடர்வதால் ஐ.நா கண்காணிப்பாளர் ஆயுதங்களுடன் நடமாட வேண்டிய நிலை வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை கேள்விப்பட்டதும் அலறியடித்தபடி வீதிக்கு வந்துள்ளன ரஸ்யா – சீனா நாடுகள்.
ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி லாரோவ் அவசர வேண்டுகோள் ஒன்றை ஐ.நாவுக்கு விடுத்தார்.
ஐ.நாவின் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிராயுதபாணிகளின் உயிர்களுக்கு நாம் உத்தரவாதமளிக்கிறோம் ஆயுதங்களுடன் ஐ.நா கண்காணிப்பாளர் உள்ளே நுழைய வேண்டாமென கேட்டுள்ளார்.
இதே வேண்டுதலை சீனாவும் அவசர அவசரமாக விடுத்துள்ளது.
மறுபுறம்..
இந்த விவகாரத்தில் ஒரு பங்காளியாக ஈரானையும் சேர்க்க வேண்டுமென சிரியா சமாதான பணிகளில் ஈடுபட்டுள்ள கொபி அனான் கேட்டுள்ளார்.
ஐ.நா, அரபுலீக் போல ஈரானும் ஓரங்கமாக பங்கேற்றால் சிக்கல்களை மேலும் விரைவாக தீர்க்கலாம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இவருடைய ஆலோசனையை அமெரிக்கா நேற்றே நிராகரித்துவிட்டது.
கொபி அனானின் செல்லாக்காசு வேலைகளை குப்பையில் வீசிவிட்டு ஆகவேண்டியதைப் பாருங்கள் என்று சிரிய போராளிகள் குழு கடந்த வாரம் நடைபெற்ற கவுலா படுகொலையின் போதே தெரிவித்துவிட்டது.

0 கருத்துகள்: