தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.12

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஸ்பெயின்


ஐரோப்பிய நாடுகளிலேயே நான்காவது மிகப் பெரிய பொருளாதார வல்லமை கொண்ட நாடு ஸ்பெயின்.இ துஜேர்மனி,பிரான்ஸ், மற்றும் இத்தாலிக்கு அடுத்ததா க GDP வீதத்தில் 11% வீதத்தை தன் வசம் கொண்டுள்ள து. சமீபத்தில் இந்நாடு சந்தித்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி, பணப் புழக்கம் குறைவு, மோசமான முதலீடு கள், பண நெருக்கடியால், அதிக விலை கொடுத்து வாங் க எவரும் முற்படாததால் காலியாக கிடக்கும்  ரியல் எஸ்டேட்கள், அல்லது மிக மலிவாக
விற்கப்படும் பணக்கார வீடுகள், வேலை வாய்ப்புக்கள் இல்லாமை ஆகிய காரணங்கள் ஸ்பெயினை பொருளாதார நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது.
இதனால் வெறுப்படைந்த பொதுமக்களால் மாட்ரிட் உட்பட பல நகரங்களில் மே மாதம் மிகப் பெரிய ஆர்ப்பாட்டபேரணியும் நிகழ்த்தப் பட்டது.

இதையடுத்து ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் பெஃலிப்பே கொன்ஷாலெஷ் கடந்த வாரம் நம் நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளதாகவும் இதற்கு முன் இப்படி ஒரு நிலமையை யாருமே எதிர்கொண்டதில்லை எனவும் ஊடகங்களில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவரைப் போவே ஸ்பெயினின் நிதியமைச்சர் தமது நாடு மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது எனவும் பணப் புழக்கம் இல்லாமல் சந்தைகள் மூடப்படக் கூடிய நிலைக்குத் தள்ளப் படக் கூடும் எனவும் இரு நாட்களுக்கு முன் கருத்துத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று வியாழக்கிழமை  ஸ்பெயின் அரசு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் தனது கடன் பிரச்சனையை ஐரோப்பிய ஒன்றியத்தின் பண ஏலத்தில் முன் வைத்தது.

ஸ்பெயின் அரசின் இந்த அழுத்தம் காரணமாக அதன் பண முடக்கத்தில் இருந்து விடுபட சிறிய வழி திறந்துள்ளது. அதாவது 611 மில்லியன் யூரோக்கள் ஸ்பெயினுக்கு நிதியுதவியாக பங்கிட்டு கொடுக்க முன்வந்துள்ளது.

0 கருத்துகள்: