தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.12

சதாம் உசேனின் செயலாளருக்கு தூக்குதண்டனை நேற்று நிறைவேறியது.


ஈராக்கில் ராணுவ ஆட்சி நடத்தி வந்த சதாம் உசேன், அமெரிக்காவுக்கு எதிரான போரில் கொல்லப்பட்டார்.  அமெரிக்க ராணுவ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், ரகசிய அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன், 2003-ம் ஆண்டில் பிடிபட்டார்.புதிய ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்ட கோர்ட்டில் சதாம் உசேன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டது. சதாமின் வலதுகரமாகவும், நம்பிக்கைக்குரியவருமாக இருந்தவர் அவரது செயலாளர் அபேத் ஹமித் ஹமவுட்.
அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் இவரும் இருந்தார். தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் இவர் சிக்கினார்.   இவர் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
சதாம் ஆட்சியில் அப்பாவிகள் பலர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவருக்கு மரண் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது.
ஜெயில் வளாகத்தில் உள்ள தண்டனை நிறைவேற்றும் மையத்தில் அபேத் ஹமித் தூக்கில் போடப்பட்டார். அவர் இறந்தது டாக்டர்கள் மூலம் உறுதி செய்யப்பட்ட பின்னர், உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை ஈராக் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

0 கருத்துகள்: