தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.6.12

சவுதி அரேபியா: சர்வதேச மன்னிப்பு கழகத்தின் எதிர்ப்பையும் மீறி தலை வெட்டி கொல்லப்பட்ட ஹெராயின் வியாபாரி.


போதை பொருள் கடத்திய குற்றத்துக்காக, சவுதியில் பாகிஸ்தானியரின் தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.சவுதி அரேபியாவில் போதை கடத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. பாகிஸ்தானை சேர்ந்த ஜோகர் உசைன் முகமத் சதக் என்பவர், சவுதிக்கு ஹெராயின் கடத்தியது
கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று ஜோகரின் தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது என்று சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

கொலை குற்ற வழக்கில் கடந்த புதன்கிழமை சவுதியை சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 31 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 76 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு சர்வதேச பொது மன்னிப்பு கழகம் மற்றும் மனித உரிமை அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்: