சிரியாவிடம் அதிகளவு இரசாயன ஆயுதங்கள் உள்ளன, இவைகளை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேல் நாட்டு இராணுவத் துணைத் தளபதி தெரிவித்துள்ளார்.ஜெருசலேத்தில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் உரையாற்றிய இராணுவ துணைத் தளபதி யாயிர் நவே கூறுகையில், சிரிய அரசு அந்நாட்டு மக்களுக்கு கொடுமை செய்து வருகின்றது, இந்நிலையில்
வாய்ப்பு கிடைத்தால் இரசாயன ஆயுதங்கள்
மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்தார்.
வாய்ப்பு கிடைத்தால் இரசாயன ஆயுதங்கள்
மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்தார்.
மேலும் உலகில் அதிக அளவில் சிரியாவிடமே இரசாயன ஆயுதங்கள் உள்ளன. ஆனால் தன்னிடம் உள்ள ஆயுதங்கள் குறித்து எந்த தகவலையும் அந்நாடு இதுவரை தெரிவிக்கவில்லை.
சிரியாவில் அரசு எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சிரிய அரசு நெருக்கடிக்கு உள்ளாகும் போது இதுபோன்ற ஆயுதங்கள் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான தீவிரவாதிகளின் கைகளுக்கு சென்று விடும் என்ற அச்சம் நிலவுகிறது என்றும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக