நித்தியானந்தா கர்நாடகாவிலிருந்து கொண்டே கன்னட நிருபரை வெளியேற்ற சொன்னது தேன்கூட்டில் கை வைத்த கதையாய் அவருக்கு பெரும் பிரச்னையை தோ ற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கர்நாடகாவில் நித்தியானந்தாவுக்கு ஆதரவாக குரல் வெகுவாக குறைந் துவிட்டதாகவும், கர்நாடகாவின் கன்னட அமைப்புகளா ன கர்நாடக ரட்சனா, வேதிகா போன்ற அமைப்புகள் நித் தியானந்தாவுக்கு எதிராக வலுவான போர்கொடி உயர்த் தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் மது ரை ஆதீனத்துக்கு சொந்தமான இடங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், இங்கு ஒரு தனிப்படை அமைத்து நிதியான ந்தாவைத் தேட, கர்நாடக
போலீசார்தமிழக போலீசாரி டம் உதவி கேட்டுள்ளனர்.
கேரளாவின் படகு வீடுகளில் அவ்வப்போது நித்தியானந்தா தங்குவார் என்று யாரோ தகவல் கசிய விட்டத்தின் பேரில் கர்நாடக் தனிப்படை அங்கும் விரைந்திருக்கிறது. இடையில் சென்றமுறை தலைமறைவான நித்தியானந்தா ரிஷிகேஷில் பிடிபட்டது போல, இந்த முறையும் ரிஷிகேஷ் பறந்திருக்கலாம் என்கிற யூகத்தில் அங்கும் தனிப்படை தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறது.போலீசார்தமிழக போலீசாரி டம் உதவி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் நித்தியின் பிடதி ஆசிரமத்தை சீல் உடைத்து, சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் வருவாய்த் துறை அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என்று அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
22 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆசிரமத்தில் அறைக்குள் அறை, அறைக்குள் அறை என்று பல மர்மங்கள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலம், எத்தனை பேரிடமிருந்து நித்திக்கு கைமாறியது, முறையாக பணம் கொடுத்து வாங்கப் பட்டதா என்பதைப் பற்றியெல்லாம் கணக்கு எடுக்க அத்தனை நில உரிமையாளர்களையும் தங்களது தாய்ப் பத்திரத்தை சோதனையில் ஈடுபட்டிருப்பவர்கள் எடுத்துக் கொண்டு வர சொல்லியிருக்கிறார்கள்.
வருவாய்ப் பிரிவு, கணக்கு, வழக்கு, செலவு இப்படி ஏகப்பட்ட விஷயங்களையும் ஆசிரமத்தோடு சேர்ந்து ஆராய்ந்து கூறவேண்டுமானால் எங்களுக்கு 6 நாட்கள் தேவைப்படும், இப்போது எதுவும் கேட்காதீர்கள் என்று கூறிவிட்டாராம் மாவட்ட ஆட்சியர்.
இப்படி தேசிய அளவில் தேடப்படும் நித்தியானந்தா, இன்னும் ஓரிரு நாட்களில் பிடிபட்டுவிடுவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக