தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.6.12

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம், மண்சரிவு : 90 பேர் பலி


வட ஆப்கானிஸ்தானில் உள்ள மலைக் கிராமப் பகுதி ஒ ன்றில் இன்று இடம்பெற்ற நிலநடுக்கதினால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு விபத்தில் சிக்கி சுமா ர் 90 பேர் மரணமடைந்துள்ளனர்.இவ்விபத்து ஏற்பட சற் று முன்னராக,  5.4 ரிக்டர் அளவு கோலில் பதிவாகிய நி லநடுக்கம் காரணமாக, ஆப்கானின் பக்லான் மாகாணம் பாதிக்கப் பட்டதுடன் அரை மணி நேரம் கழித்து இடம் பெ ற்ற மற்றுமொரு நிலநடுக்கம் இம்மண் சரிவை ஏற்படுத் தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆப்கானி ன் அரசு, பாதை திருத்தும்
வாகனங்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை மேற் கொண்டு வருகின்றது.

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனைய நபர்களை மீட்கும் பணி மிகத் துரிதமாக நடைபெற்று வருவதாக பக்லான் மாகாண ஆளுநர் முன்ஷி மாஜீட் தெரிவித்துள்ளார். சடங்குகளை மேற்கொள்ளவும் வசதிகள் செய்து தர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வீடுகள் உடைபட்டு மண்ணுக்குள் புதையுண்டவர்களில் உயிர் தப்பித்தவர்கள் மிக அரிது எனக் கூறப்படுகின்றது. பக்லானைத் தவிர ஜில்கா மற்றும் நாஹ்ரின் ஆகிய மாகாணங்களும் நிலநடுக்கத்தால் பாதிக்கப் பட்டு உள்ளன.

0 கருத்துகள்: