தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.6.12

பஹ்ரைனில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 வயது வீரச் சிறுவன்


பஹ்ரைனில் சாலை மறியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக 11 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.பஹ்ரைன் நாட்டில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், கடந்த ஓராண்டாக அரசுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.கடந்த மாதம் 14ஆம் திகதி அலி ஹசன் என்ற 11 வயது பள்ளி மாணவன் மனாமா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டான்.இதை எதிர்த்து மனித உரிமை அமைப்பை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர். சிறுவன் அலி ஹசன் மூன்று முறை இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.சிலர் சிறுவனுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற செயலில் ஈடுபடுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த
நீதிபதி, சிறுவனைஅவனது பெற்றோரிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டார். பள்ளி தேர்வில் கலந்து கொள்ளவும் சிறுவனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 20ஆம் திகதி மீண்டும் நடக்கிறது.

0 கருத்துகள்: