தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.6.12

மத(ம்) தீவிரவாதியின் அரைவேக்காடுத்தன பேச்சு!!

பாட்னா:’ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்’ – இந்த பழமொழி குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மதம் பிடித்த தீவிரவாதி மோடிக்கு கனகச்சிதமாக பொருந்தும்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன் தினம் நடந்த மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் பேசிய மோடி, ‘ஒருகாலத்தில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் வலம் வந்த காலம்போய் சாதிய அரசியலால்
அவை மிகவும் பின்தங்கிப் போய்விட்டன’ என்று கூறியிருந்தார்.

தீவிரவாதி மோடியின் இந்த அரைவேக்காட்டுத் தனமான பேச்சு பீகார் அரசியல் தலைவர்கள் இடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பா.ஜ.கவின் தோழமை கட்சியும் பீகாரின் ஆளுங்கட்சியுமான ஐக்கிய ஜனதா தளத்தின் முதல்வர் நிதீஷ் குமார் மோடியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘மோடி பிறரைக் குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், தமது மாநிலத்தைக் குறித்து சிந்திக்கவேண்டும். குஜராத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அங்குள்ள சில பிரச்சனைகள் குறித்து அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். அது சுகாதாரத்துறை ஆனாலும் சரி, பொருளாதாரத்துறை ஆனாலும் சரி. பீகாரில் பிரச்சனைகள் குறித்து தீர்வு காண பிறரின் உபதேசம் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் பிரச்சனைகளை தீர்த்து வருகிறோம். மாநில மக்களுக்கு உபதேசம் செய்பவரின் கடந்த காலத்தை (குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைப் புகழ் மோடி) அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.’ என்று நிதீஷ் குமார் தெரிவித்தார்.

நாட்டுப்புற பழமொழிகளை (pot calling kettle black) கூறி நிதீஷ் குமார் மோடியை விமர்சித்தார். பழமொழிகளை கூறிய பிறகு, செய்தியாளர்களிடம், இதற்கு நீங்களே விளக்கமளித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

அதேவேளையில், தேசம் முழுவதும் சாதிய பிரச்சனை நீடிப்பதாக ஒப்புக்கொண்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும் என்.டி.ஏ கன்வீனருமான சரத் யாதவ், குஜராத்தில் சாதி வெறியை தூண்டி மக்களை கொல்லவில்லையா என கேள்வி எழுப்பினார். மோடிக்கு வரலாற்றைக் குறித்து குறைந்தே அளவே அறிவுள்ளது என்று சரத் யாதவ் கிண்டலாக கூறினார்.

மத சிறுபான்மையினரை கூட்டுப் படுகொலைச் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தீவிரவாதி மோடி என்று ஐக்கிய ஜனதாதளம் குற்றம் சாட்டியுள்ளது.

குஜராத்தில் மதத்தை சொல்லி மக்களை தூண்டி சிறுபான்மையின மக்களை கொல்லவிலையா? மத தீவிரவாதி மோடியின் பேச்சுக்கு முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: