பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் பதவியை பறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றவில்லை என்று கிலானிக்கு கண்டனம் தெரிவித்திருந்த உச்ச நீதிமன்றம்,அவர் மீது நீதிமன்ற அவமதி்ப்பு செய்ததாக குற்றம் சாட்டியது. இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், கிலானி நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் கிலானியின் அரசியல் வாழ்க்கைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக