தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.6.12

கடலுக்கு அடியில் அதிசய பொருள் : ஊடகங்களில் கவனம் பெறும் புதிய மர்மம் (வீடியோ)


சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய இரு நாடுகளுக் கும் இடைப்பட்ட பால்டிக் கடற்பகுதியில் மர்ம வ ளையம் போன்ற ஒரு பொருள் சமீபத்தில் கண்டுபி டிக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியு ள்ளன.மேலும் இப்படங்கள் மூலம் குறித்த அந்த பொருள் ஒரு பறக்கும் தட்டாக இருக்கலாம் என ஊகங்கள் கிளம்பத் தொடங்கியுள்ளன.இவ்வளை யம் குறித்து கடல் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பீட்டர் லின்ட்பெர்க் தகவல்
அளிக்கையில் இவ்வளையம் இயற்கையான புவியியல் அம்சம் அல்லது பவளப் பாறையாக இருக்கலாம் எனக் கூறியுள்ளார். இப் பொருள் பறக்கும் தட்டு எனக் கருதப் படுவதற்கு ஏற்பாக உலோகத்தால் ஆக்கப் பட்டதல்ல என்று சுவீடன்  விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

எனினும் இதை மறுத்த பீட்ட லின்ட்பெர்க் இது வேற்றுக் கிரக வாசிகளின் வாகனமாக இருப்பதற்கு உலோகத்தால் தான் ஆக்கப் பட்டிருக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளார். சில வேளைகளில் வேற்றுக்கிரக வாசிகளும் தமது வாகனங்களை பாறைகள் அல்லது விண்கல் போன்ற பதார்த்தங்கள் மூலம் செய்வதற்கு முனைந்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜூன் 1 ஆம் திகதி தொடங்கி சுமார் 12 நாட்கள் கடலுக்கு அடியில் 200 அடி அகலமான இந்த மர்ம வளையம் தொடர்ச்சியாக ஆராயப் பட்டது. இதற்காக ரோபோட் கமெரா மற்றும் சோனார் ஆகிய கருவிகள் பயன்படுத்தப் பட்டன. 60 மீற்றர் விட்டமுடைய இப்பொருள் ஒரு மிகப் பெரிய கல்லாக விளங்கும் அதேவேளை இதன் வயது ஐஸ் ஏஜ் எனும் இறுதி கடும் பனிக் காலத்துக்கு முற்பட்டது எனக் கூறப்படுகின்றது.

சோனார் மூலம் ஆராயப் பட்டதில் இக்கல்லில் இருந்து சுரண்டப்பட்ட கறுப்பு நிறத் துணிக்கைகள் என்னவென்றே அடையாளம் காணப்பட முடியவில்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை விட மர்மமான விடயம் இவ்வளையத்தை தாங்கும் தூண்  வெறும் 8 மீற்றர் உயரமே உடையது என்பதாகும்.

கடல் ஆராய்ச்சியாளர் பீட்டர் லின்ட்பெர்க் கூறுகையில் வேற்றுக்கிரகவாசிகள் விண்கப்பல்களைக் கட்டுவதற்கு உலோகம் தவிர்ந்த ஏனைய இயற்கை வளங்களைப் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளதெனவும் இதை உறுதிப்படுத்தினால் அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் மிகவும் வியப்புக்கு உள்ளாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: