ஆப்பிரிக்க நாடான எகிப்து அதிபர் பதவிக்கான தேர் தல் புதன்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் மிகு ந்த ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். வி யாழக்கிழமையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது . அந்நாட்டில் சுமார் 20 ஆண்டுகளாக அதிபர் பதவி யில் இருந்த ஹோஸ்னி முபாரக், கடந்த ஆண்டு ஏ ற்பட்ட புரட்சியால் பதவி விலகினார். அவர் மீது ப ல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள் ளன. முபாரக் பதவி
விலகியபின் நடைபெறும் தேர் தல் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புக் குள்ளான து.
அதற்கு ஏற்பவே எகிப்து மக் களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.தேர்தல் இருநாள்கள் நடைபெறுகிறது.
விலகியபின் நடைபெறும் தேர் தல் என்பதால் மிகவும் எதிர்பார்ப்புக் குள்ளான து.
அதற்கு ஏற்பவே எகிப்து மக் களும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.தேர்தல் இருநாள்கள் நடைபெறுகிறது.
அந்நாட்டின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் இத்தேர்தலில் இஸ்லாமிய கட்சிகளும், மதச்சார்பற்ற கட்சிகளும் போட்டியிடுகின்றன. மொத்தம் 13 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால் 5 முக்கிய வேட்பாளர்கள் இடையேதான் கடும்போட்டி நிலவுகிறது.
இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் அம்ர் மெüசா, முன்னாள் பிரதமர் அகமது ஷாஃபிக், இஸ்லாமியக் கட்சிகளின் முகமது மோரிஸ், அபு அல் முனிம் அபுல், ஹமாதின் சபாஹி ஆகியோர் முக்கியமானவர்கள். மே 29-ம் தேதி முடிவு வெளியாகிறது.
எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை வாக்கு கிடைக்கவில்லை என்றால், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் வேட்பாளர்களுக்கு மீண்டும் ஒரு சுற்று தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர் அதிபர் ஆவார். தேவை ஏற்பட்டால் இத்தேர்தலை ஜூலை 16,17-ம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய அதிபர் ஜூன் 1-ல் பதவியேற்பார்.
சர்வதேச பார்வையாளர்கள், நீதித்துறையின் கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்குதான் வாக்குப்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும், காலை 6 மணி முதலே வாக்குச்சாவடியில் மக்கள் வரிசையில் நிற்கத் தொடங்கிவிட்டனர்.
இது தொடர்பாக வாக்காளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "எனக்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் காலையிலேயே வந்து வாக்களிக்கக் காத்திருக்கிறேன்.
எனது நாட்டை இதற்கு மேலும் எவரும் கொள்ளையடிக்கக் கூடாது என்பதுதான் இதற்குக் காரணம்.
தேர்தல் மீதும், நாட்டு மக்கள் மீதும் எனக்கு நம்பிக்கையுள்ளது. அடுத்த அதிபர் நேர்மையாளராக இருப்பார்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக