கேரளாவில் பான் மசாலா மற்றும் குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப் படுவதாக முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.புகையிலைப் பொருட்களால் வாய் புற்றுநோய் வருவது அதிகரித்துள்ளதால் புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த சட்டம் 22 ம் தேதி அறிவிக்கை வெளியிடப் பட்டு உடனடியாக அமலுக்கு வருவதாகும் தெரிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து செய்தியாளர்க
ளிடம் பேசிய உம்மன் சாண்டி '' கடந்த மாதம் புகையிலைப் பொருட்களை இந்தியா முழுவதும் தடை செய்யக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியதாகவும், உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி பான் மற்றும் மசாலாப் பொருட்களுக்கு மாநிலங்களே தடை விதித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு பதில் அளித்ததாகவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக