தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.5.12

பாகிஸ்தான் மீதான அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதல்களின் பின்னணியில் பிரிட்டன்


கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இதுவரை அமெரிக்கா நூற் றுக்கு மேற்பட்ட ஆளில்லாவிமானத்தாக்குதல்களை பாகி ஸ்தானின் அல் கைதாவினர் இலக்குகள் மீது குறிவைத்து நிகழ்த்தியுள்ளது. இத்தாக்குதல்கள் மூலம் முக்கிய தலை வர்களை இழந்து வரும் அல்கொய்தா அமைப்பினர், மேற் குலக நாடுகளில் தற்கொலைத் தாக்குதல்களை நிகழ்த்த முடியாத அளவு பலவீனப்படுத்தப் படும் என்பது அமெரிக் காவின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்நிலையில் சமீபத்தி ல் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்
தாக்குதல்களுக்கான இலக்குகள் பற் றிய ரகசிய தகவல்களைப் பிரிட்டன் வழங்கியுள்ளது எனும் புதிய குற்றச்சாட்டு ஒன்றை பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைப்பு முன்வைத்துள்ளன. இவ்விடயம் தொடர்பாக ரோயல் யுனைட்டட் சேர்விஸஸ் இன்ஸ்டிடுயூட்டின் பொறுப்பாளர் மைக்கல் கிளார்க் கூறுகையில் பிரிட்டன் ஏஜன்டுகள் சந்தேகத்துக்குரிய தீவிரவாதிகளின் இடங்கள் குறித்த புலனாய்வு விபரங்களை தனது அமெரிக்க தோழர்களுக்கு வழங்க மறுத்தால் அது ஆச்சரியத்துக்குரிய ஒரு விடயம் என்று கூறியுள்ளார்.

இதேவேளை பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெலிகிராஃப் பத்திரிகையில் இன்று வெளியான ஒரு தகவலின் படி பாகிஸ்தானில் வசிக்கும் நூர் கான் எனும் பொதுமகனின் தந்தை அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு பிரிட்டனின் உளவுத் தகவலே காரணம் என குற்றம் சாட்டப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

நேற்று முன் தினம் அமெரிக்க விமானங்கள் நடத்திய எறிகணை தாக்குதலில் அல் கைதாவின் 10 ற்கு மேற்பட்ட போராளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: