தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.5.12

மிற் ரொம்னி கையில் ஆட்சியை கொடுக்காதீர்கள் : ஒபாமா அறைகூவல்


வரும் நவம்பர் 6ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் ந டைபெற இருக்கிறது.இந்தத் தேர்தலில் அமெரிக்க அதி பர் பராக் ஒபாமாவை எதிர்த்து றிப்பப்ளிக்கன் கட்சி சார் பில் மிற் றொம்னி போட்டியிடுவார்.நேற்று ஒபாமர் த னது தேர்தல் பிரச்சாரத்தை மிகவும் எளிமையான மு றையில் ஆரம்பித்தார்.அப்போது அவர் கூறினார் :வல துசாரி போக்குடைய மிற்றொம்னி அமெரிக்க பொரு ளதாரத்தை தன்னுடைய தனி மனித கையில் எடுக்க ஆசைப்படுகிறார்.நடுத்தர வகுப்பு மக்களுக்கு
எதிரான சட்டங்களை கொண்டு வந்து அமெரிக்க முதலாளிகளை காப்பாற்ற திட்டமிடுகிறார்.இவருடைய கையில் ஆட்சியை ஒப்படைத்தால் அமெரிக்க ஏழை மக்களுடைய வாழ்வில் பெரும் நாசம் ஏற்படும்.
பழைய யோர்ஜ் டபிள்யூ புஸ் போன்றவர்களின் நச்சுத்தன்மை மிக்க பொருளாதார திட்டங்களை கையில் ஏந்தி வருகிறார்.
இதனால் மறுபடியும் அமெரிக்காவை நாசக்குழியில் தள்ளிவிட வாய்ப்புள்ளது.
எனவே…
அமெரிக்க மக்கள் இவருடைய கையில் ஒருபோதும் ஆட்சியை ஒப்படைத்துவிடக் கூடாது என்றார் ஒபாமா.
ஆனால்…
குற்றங்கள் பிடிக்க முடியாத தலைவராக உள்ள ஒபாமாவின் பழைய காதல் கதைகளை தேடிப்பிடிக்க பலர் முயன்றுள்ளனர்.
அவருடைய தந்தை ஓர் இஸ்லாமியராக இருப்பதால் ஒபாமா இளமையில் இஸ்லாமிய பாணி ஆடை அணிந்து திரிந்ததாக கூறுகிறார்கள்.
இதனால் பல அதிரடி தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.
இடையில் ஒரு சிக்கல் இருக்கிறது..
இஸ்லாமிய சர்வாதிகாரிகள் மத்திய கிழக்கில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டியுள்ளது.
இதற்கான உலகத் திட்டத்தை அமல் செய்ய ஒபாமா மேலும் நான்கு வருடங்கள் பதவியில் இருப்பது அவசியம்.
ஒபாமா பின்லேடனை கொல்ல உத்தரவிட்டதை ஏற்ற அரபு உலகம் ஜோர்ஜ் புஸ் உத்தரவிட்டிருந்தால் ஏற்றிருக்காது என்பது தெரிந்ததே.

0 கருத்துகள்: