மதுரையில் ஆதீனத் தரப்புக்கும் இளைய ஆதினமாக முடி சூட்டப் பட்டுள்ள நித்யானந்தா சீடர்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்ததால் மதுரையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் திருவண்ணாமலைக்குச் செல்லும் முன்னர் தங்க நகைகள் மற்றும் பணம் உள்ள தனி அறையின் சாவியை தம் உதவியாளர் வைஷ்ணவியிடம் ஒப்படைத்துச் சென்றதாகத் தெரிகிறது.வைஷ்ணவியிடம் சாவியைக் கேட்டு நித்யானந்தா சீடர்கள் வைஷ்ணவியை தாக்கி
யதாகத் தெரிகிறது. வைஷ்ணவி தாக்கப் பட்டத் தகவல் கேள்விப் பட்ட செய்தியாளர்கள் ஆதீன மடத்துக்குள் நுழைந்துள்ளனர். பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பதா வேண்டாமா என்பதில் ஆதீனத் தரப்பினருக்கும் நித்யானந்தா சீடர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது.
நன்றி:இந்நேரம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக