பிரான்ஸில் இன்று நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் சோசலிச கட்சியின் பிரான்ஸுவாஸ் ஹோ லந்து வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் 1971 ம் ஆண் டுக்கு பிறகு முதன்முறையாக அந்நாட்டின் நடப்பு அதி பர் ஒருவர் (சர்கோஸி) இரண்டாம் முறையாக தொடர் ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் இரு தசாப்த காலத்தின் பின்னர் முதன்முறையாக பிரான்ஸில்
சோசசிலகட்சியை சேர்ந்த ஒருவர் அதிபராக வெற்றிவாகை சூடியுள்ளார். கடந்த வாரம், அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தலில் தோல்வியடைந்திருந்த நிகோலாஸ் சார்கோசி இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிலும் தோல்வியை தழுவியுள்ளார். நிகோலாஸ் சார்கோஸிக்கு 48 % வீத வாக்குகளும், பிரான்ஸுவா ஹோலந்துக்கு 52 % வீத வாக்குகளும் கிடைத்துள்ளன.

கடும் போட்டி நிறைந்திருந்த இத்தேர்தலில் சிறிய வித்தியாசத்தில் சார்கோஸி தோல்வி அடைந்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி, வேலையில்லா பிரச்சினை, ஆப்கானிஸ்தான் போர்முனையில் பிரான்ஸ் இராணுவம் தொடர்ந்து நிலை கொண்டிருத்தல் என்பன இத்தேர்தலில் சார்கோஸியின் தோல்விக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சார்கோஸி மீதான வெறுப்புணர்வினாலேயே மக்கள் ஹோலந்துக்கு வாக்களித்துள்ளதாகவும், மற்றும் படி ஹோலந்து தேர்தல் பிரச்சாரத்தில் அளித்த வாக்குறுதிகளை அவருடைய அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்தில் நிறைவேற்றுவதென்பது மிக கடினமானது எனவும் சில அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக