தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான ரொபேட் பெல்ஸ் மரண தண்டனை அ பாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப் கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன் றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூ டுபிடித்துள்ளன.தனது நண்பன் ஒருவன்
கண்ணி வெ டியில் காலை இழந்த காரணத்தால் இந்தப் படுகொலைகளை செய்ததாக இவர் தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் இவர்தான் சுட்டார் என்பதை நீதிபதி ஊர்ஜிதம் செய்தால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அமெரிக்கா தீர்க்கமாக அறிவித்துள்ளது.
கண்ணி வெ டியில் காலை இழந்த காரணத்தால் இந்தப் படுகொலைகளை செய்ததாக இவர் தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் இவர்தான் சுட்டார் என்பதை நீதிபதி ஊர்ஜிதம் செய்தால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அமெரிக்கா தீர்க்கமாக அறிவித்துள்ளது.
இதே முன்மாதிரியை சிறீலங்கா பின்பற்றி பொது மக்களை கொன்று, பாலியல் வக்கிரம் செய்த படையினர், அதிகாரிகள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக திட்டவட்டமான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் வேண்டுதலாகும். இனவாத படுகொலை என்பது அரசியல் துஷ்பிரயோகம், பயங்கரவாதம் போன்ற குற்றச் செயல்களைவிட மோசமான பயங்கரவாதமாக பார்க்கப்படுவதால் உலக மன்றில் சிறீலங்கா தப்பித்துக்கொள்ள வழியிருப்பதாக தெரியவில்லை.
இதற்கு அடுத்த உதாரணம் நேற்று அமெரிக்காவில் வெடித்த ஆர்பாட்டமாகும். 17 வயதுடைய நிராயுதபாணியான கறுப்பின சிறுவன் ரரோவன் மார்டின் என்பவன் 26 வயதுடைய வெள்ளை நிற வாயிற்காப்பு ஊழியரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக புளோரிடா, பிலடெல்பியா போன்ற இடங்களில் ஆர்பாட்டங்கள் இடம் பெற்றன. இது இனவாத தாக்குதல் என்று ஆர்பாட்டக்காரர் தெரிவிக்கிறார்கள். சிறுவனை சுட்டுக்கொன்ற காவல் ஊழியர் தற்பாது காப்பிற்காக சுட்டதாக தெரிவிக்கிறார். ஆனால் இந்தக் கொலையில் நிறவாத, இனவாத துவேஷம் கலந்துள்ளதால் அமெரிக்க அதிபரே நேரடியாக தலையிட்டுள்ளார்.
ஒரு கொலை துவேஷத்துடன் நடாத்தப்பட்டால் அது பாரதூரமான விவகாரமாக மாறும். எனவே சிறீலங்காவில் தமிழர் மீதான தாக்குதலிலும் இதுபோன்ற துவேஷம் கலந்துள்ளதால் அது பாரிய விவகாரமாகவே வருங்காலங்களில் விஸ்வரூபம் எடுக்கும் என்பது தெரிகிறது. சிறீலங்கா விவகாரத்தில் ஓர் அடி சறுக்கியுள்ள இந்தியா தொடர்ந்து சறுக்க வேண்டிய நிலையே வரும் என்றும் தெரிகிறது.
மேலும் உலக வங்கி தலைவர் பதவிக்கு எல்லோரும் ஆச்சரியப்படும்படியாக ஒரு கொறிய பின்னணி கொண்ட அமெரிக்கரை பராக் ஒபாமா சிபாரிசு செய்துள்ளார். இந்தத் தேர்வு உலக மட்டத்தில் பலத்த ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது. உலக வங்கி தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவதானால் அமெரிக்காவே ஆதரவளிக்க வேண்டும். காரணம் அங்கு அமெரிக்காவுக்கே அதிக வாக்குகள் உண்டு. வைத்தியத்துறை கற்கைப் பின்னணி கொண்ட ஜிம் யோங் கிம் இந்தப் பதவிக்கு அமெரிக்க தரப்பில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார். இவருடன் நைஜீரிய நிதியமைச்சர் நாகோஜி ஒகன்யோ இவாலா, மற்றும் கொலம்பியா நிதியமைச்சர் யொய்ச அன்ரோனியோ ஒக்கம்போ ஆகியோர் போட்டியிடுகிறார்கள். ஆனால் 1944 ல் இருந்தே உலக வங்கியை அமெரிக்காவே கட்டுப்பாட்டில் வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.
இப்பதவிக்கு முன்னர் கிளரி கிளின்டனின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டபோது அவர் ஏற்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒபாமாவுக்கு பின் கிளின்டன் அதிபர் தேர்தலுக்கு வருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். கறுப்பரை அதிபராக்கி, கொறியரை உலக வங்கி தலைவராக்கி உலக சமுதாயத்தின் இனவாதங்களுக்கு சாவு மணி அடிக்கும் அமெரிக்க முயற்சி இந்திய, சிறீலங்கா நாடுகளுக்கு நல்லதோர் உதாரணமாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக