தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.3.12

நாசா ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்ற விஞ்ஞானிக்கு 13 ஆண்டுகள் சிறை


அமெரிக்காவின் நாசா விண்வெளி மற்றும் பாதுகாப்பு குறித்த ரகசியங்களை இஸ்ரேலுக்கு விற்க முயன்றதாக முன்னாள் நாசா விண்வெளி விஞ்ஞானிக்கு உள்ளூர் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவொர்ட் நெளசட்டே(வயது 42) இவர், அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு
பெற்றவர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாசா விண்வெளி ஆய்வு மற்றும் பாதுகாப்பு குறித்த தகவல்களை சேகரித்து இஸ்ரேல் நாட்டிற்கு விற்க முயன்றதாக ஸ்டீவொர்ட் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து இவர் மீதான வழக்கு, ஜம்ப்சூட் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
நேற்று நடந்த விசாரணையில், குற்றத்தை தான் ஒப்புக்கொள்வதாக ஸ்டீவொர்ட் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி பவுல் பயர்ட்மேன், விண்வெளி ரகசியங்களை விற்க முயன்றதாக, ஸ்டீவொர்ட் நெளசட்டேவுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

0 கருத்துகள்: