தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

10.12.11

சென்னை வரவிருக்கும் அன்னா ஹசாரே

இது தொடர்பில்`ஊழலுக்கு எதிரான இந்தியா' அமைப்பின் சென்னை பிரிவு நிர்வாகி வெங்கட்நாராயணன் தெரிவிக்கும் போது,மத்திய அரசு வலிமையான லோக்பால் சட்ட மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் வருகிற 18-ந் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சமூக சேவகர் அன்னாஹசாரே மற்றும் அவரது குழுவினர் கலந்து கொள்கிறார்கள்.பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் பின்னர்அறிவிக்கப்படும்.லோக்பால் சட்ட வரம்பில் கீழ்நிலை அரசு ஊழியர்களையும் சேர்க்க வேண்டும்என்பது

அன்னா ஹசாரேவின் முக்கிய கோரிக்கை ஆகும். ஆனால் மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. வலிமையான லோக்பால் மசோதாவை கொண்டு வரும் வகையில் போராடி வரும் அன்னா ஹசாரே குழுவினருக்கு தார்மீக ரீதியாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் இவ்வாறு வெங்கட்நாராயணன் கூறினார்.

0 கருத்துகள்: