முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு, போராட வேண்டிய அவசியமா ன நிலையிருக்கின்ற போதும் உதிரிகளாக நின்று குரல் கொடுத்து வருவது, ஆக்கபூர்வமான பலனை ஒருபோ தும் தரப்பபோவதில்லை என அவதானிகள் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதேவேளை கேர ளாவில் அனைத்து அரசியற்கட்சிகளும்ஒன்றினைந்து இந்த விவகாரத்தல்
தமது நடவடிக்கைகளைப் பலமாக மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. தமிழக அரசியற் கட்சிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றிலும் கூட இதே நிலையில்தான் செயற்பட்டன.
இவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து அக் கட்சிகள் மாறவேண்டியதன் அவசியம் அறிந்து, தலைவர்கள் செய்றபட வேண்டுமென வலியுறுத்தி குவைத் தமிழர் கூட்டமைப்பு ஒரு அறிக்கையை மின்னஞ்சல் வழியாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள் என்ற தொனிப் பொருளில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவமும் கீழே:
தமது நடவடிக்கைகளைப் பலமாக மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. தமிழக அரசியற் கட்சிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற போராட்டங்கள் பலவற்றிலும் கூட இதே நிலையில்தான் செயற்பட்டன.
இவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து அக் கட்சிகள் மாறவேண்டியதன் அவசியம் அறிந்து, தலைவர்கள் செய்றபட வேண்டுமென வலியுறுத்தி குவைத் தமிழர் கூட்டமைப்பு ஒரு அறிக்கையை மின்னஞ்சல் வழியாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள் என்ற தொனிப் பொருளில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவடிவமும் கீழே:
வணக்கம்!. குவைத்தில் வாழ்ந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அமைப்புகளும் இணைந்து இக்கோரிக்கையினை முன்வைக்கின்றோம். தமிழகத்தில் மொழிக்கும் இனத்திற்கும் நிலத்திற்கும் எதிரான செயல்பாடுகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றிப் பரவித் தமிழர்களை அழுத்திவைப்பது நெடுங்காலமாக மிக எளிதாக நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். இது அண்மைக்காலங்களில் அதிகமாகவும் அழுத்தத்தோடும் நடைபெற்றுவருகிறது. காலங்கள் பல கடந்தும் எவ்விதமான பிரச்சனைகளும் நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்லாமல் உள்ளன. ஆக்கப்பூர்வமான வழிமுறை இல்லாமலும் ஒருமித்த கருத்தினடிப்படையில் அரசியல் இயக்கங்கள் இணைந்து போராடும் நிலை இல்லாமலும் இருந்து வருகிறது.
தமிழகத்திற்கெதிரான அண்டை மாநிலங்களான கருநாடகா கேரளா ஆந்திராவிற்கெதிரான எந்தவொரு நிலையான முடிவை எட்டாமலும்இ நிரந்தரத்தீர்வை வலியுறுத்தும்படியான செயல்பாடுகளைச் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ எடுப்பதற்கான முயற்சிகளும் இன்றி இவற்றிக்கெதிராகப் போராடும் இயக்கங்களை ஒடுக்குவதிலும் ஒழிப்பதிலும் மட்டுமே ஆர்வங்கொண்டு இயங்குகின்றன தமிழகத்தை ஆளும் கட்சிகள்.
தமிழ் மொழியினைக் காப்பதற்கான நடவடிக்கைகளும்இ தமிழகத்தின் அனைத்து அரசு நடைமுறைகளிலும் ஆட்சி மொழியாக நிலைக்க வைக்கும் முயற்சிகளும்இ கல்வி மொழியாகவும் சட்ட மொழியாகவும் நிலைநிறுத்தவும் எவ்வித முயற்சியும் தமிழகத்தில் இல்லை. இதுகுறித்த கவலைதுளியும் இன்றிஇ கொள்கை அளவில் கூடப் பல கட்சிகளுக்குச் சரியான புரிதல் இல்லாத நிலையே காணப்படுகிறது.
மொழி வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறையற்ற அரசுகள்தாம் தமிழகத்தை ஆண்டுவருகின்றன.
நிலவளம்இ ஆற்றுவளம்இ இயற்கைச் செல்வங்கள்இ பழங்காலச் சான்றுகள் யாவும் காக்கப்படவில்லை. பண்பாடுஇ கலை இலக்கியச் செல்வங்களைக் காப்பதிலும் எவ்வித அக்கறையுமற்ற அரசுகள்தாம் நம்மை ஆண்டுகொண்டு வருகின்றன.
ஈழத்தில் இனப்படுகொலையானாலும் பரமக்குடியில் ஆதிக்குடிகள் கொல்லப்பட்டாலும் இணைந்து முடிவெடுக்கும் கட்சிகள் தமிழகத்தில் காணப்படவில்லை.
கூடங்குளப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமிழினத்தையும் காப்பதற்கானதென்றாலும் யாருமே குரல்கொடுக்க முன்வருவதில்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் தரமறுக்கும் கேடுகெட்ட மாநிலமாகக் கேரளா இருந்தும்கூட போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் நிலைப்பாடற்ற இயக்கங்கள்தாம் முன்வருகின்றன.வலிவான திராவிடக்கட்சிகள் செயல்படாமல் உள்ளன.
கடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் போட்டியிட்டனர். சட்ட மன்றஇ நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைக்கவும் இடம்பெறவும் ஆளாய்ப் பறக்கின்றன ஆளத்துடிக்கும் கட்சிகள். ஊழல்இ இலஞ்சம் தனிமனித ஒழுக்கமின்மைகளில் முன்னிற்கின்றனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள்.
தமிழினத்திற்கெதிரான முயற்சிகளை முறியடிக்கவும்இ அவற்றிற்கெதிரான போராட்டங்களை நடத்திடவும் இவர்கள் யாரும் முன்வருவதில்லை. தமிழகத்தைத் தானே ஆளப்போவதாக அறைகூவல் விடுக்கும் இப்போலிகள்இ போராட்டக்களங்களில் முகம்கொடுக்க மறுக்கின்றனர்.
இனியும் இத்தன்மைகளைக் கொண்டு இயங்குபவர்களைப் பொறுத்துக்கொள்ளத் தமிழகம் தயாராயிருக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டாம். தயங்காமல் போராடுபவர்களும் தமிழினத்திற்காக இயங்கும் உண்மையான தமிழர்களையுமே தலைவர்களாக ஏற்க தமிழினம் தயங்காதுஇ தான் தோன்றித்தனமாய்த் தன்னலம் கொண்டலையும் தலைவர்கள் என்போரைத் தள்ளிவிடவும் தயங்கமாட்டோம்.
தமிழகத்தை ஆளவும்இ மக்கள் பிரதிநிதிகளைப் பெருமளவில் வைத்துக்கொள்ளவும் துடிக்கும் கட்சிகள்இ தமிழகத்திற்கும் மக்களுக்கும் உண்மையாகப் பணியாற்ற கடைசியான ஒரு வாய்ப்பாக முல்லைப்பெரியாறு பிரச்சனையினைக் கருத்தில்கொண்டுஇ இப்பிரச்சனையில் தமிழகத்திற்கு உறுதியான நிலையான முடிவினைக் காண வேண்டும்.
அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் நியாயமான உண்மையான காரணங்கள் இருந்தும் எதிராளிகள் தமிழினத்தைக் கொன்றொழிக்கும் முயற்சிகளில் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் முறியடிக்காது வெற்றிகொள்ளாமல் அதனைச் சிதைப்பது போன்ற நிலைகளிலேயே தமிழகக் கட்சிகள் இயங்கிவருகின்றன.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில்இ தமிழக கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். கேரளத்திற்கெதிராகச் சட்டரீதியாகவும் நடுவண் அரசு மூலமாகவும் இறுதியான தீர்வினை எட்ட வேண்டும்.
கேரளத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடைவிதித்துஇ தமிழகத்திலிருந்து செல்லும் காய்கறிகள் பால் உள்ளிட்ட உணவுப்பொருட்கள்இ மணல்இ மின்சாரம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஆகிய அனைத்தையும் உடனே தடைசெய்ய வேண்டும்.
தமிழகத்தில்இபுதுவையில் இயங்கும் மலையாளிகளின் நிறுவனங்களை உடனடியாகப் பூட்டவேண்டும். இவை இனி என்றுமே தமிழர்களிடம் வணிகம் செய்யும் வாய்ப்பினை இல்லாமல் செய்ய வேண்டும். தமிழர்களிடம் இத்தகு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கட்டுமானப் பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் பெருமளவில் கூலிகளாகச் சென்று பணிபுரிபவர்களை உடன் திரும்ப அழைத்துஇ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் பணிபுரியும் இடங்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தரவேண்டும்.
மலையாள பத்திரிக்கைகள் திரைப்படங்களைத் தமிழகத்தில் தடைசெய்யவேண்டும். மலையாள தொலைக்காட்சிகளை தமிழகத்தில் தடைசெய்யவேண்டும். அனைத்து கம்பிவட இணைப்பாளர்களையும் இதற்கென அணுகிஇ அவர்களை இணங்கச்செய்ய வேண்டும்.
தமிழ்த் திரைப்பட உலகில் பணிபுரியும் அனைத்து மலையாளிகளையும் வெளியேற்ற வேண்டும். மலையாளிகள் நடித்தப் படங்களையும் அவர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள்இ மலையாளக் கலைஞர்களின் பங்களிப்புடன் வெளிவரும் திரைப்படங்களையும் வெளியிடத் தடைவிதிப்பதோடுஇ இதற்கு இணங்கிச் செயல்பட அனைத்து தமிழ்த்திரைக் கலைஞர்களையும் வலியுறுத்தவேண்டும்.
கேரள மாணவர்களைத் தமிழகக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளத் தடைவிதித்துஇ அனைத்துக் கல்வி நிலையங்களையும் இதற்கு உடன்பட வைக்க வேண்டும்.
தமிழகத்தில் பல இடங்களில் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலங்களை மலையாளிகள் வாங்கிக் குவித்துள்ளனர். இந்நிலங்களைக் கைப்பற்றித் தமிழகத்திற்குச் சொந்தமாக்க வேண்டும். தமிழகத்தில் விளையும் காய்கறிகள்இ உணவுப்பொருட்கள்இ மீன் ஆடு மாடு உள்ளிட்டவற்றையும் ஏனைய தயாரிப்புக்களையும் தமிழர்களே ஏற்றுமதி செய்ய வழிவகை காணவேண்டும்.
தமிழகத்தில் எல்லா வளமிருந்தும்இ கல்வியும் திறமையுமுள்ளவர்களாகத் தமிழர்கள் இருந்தும்இ அரசியல்இ அறிவியல்இ அறவியல் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் முதன்மைப்பெற்றிருந்தாலும் எங்கும் அடிமைகளாகவும் முன்னின்று செயலாற்றும் வாய்ப்பினைப் பெறாமலும்இ எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும் பகைமைகளுக்கும் ஆளாகிஇ தம்மில் பிரிந்துஇ வாழவழியற்ற நாதியற்ற ஓரினம்போல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
பழம்பெருமைகளைப் பேசுவதும்இ வாய்ப்பு கிடைக்குமிடங்களில் உணர்ச்சியாகப் பேசி உரக்கக்கூவிப் பிரிவதும்இ தன்னலம் ஓங்கிக் காணப்படுவதும்இ ஊழல் இலஞ்சம் மிகுந்தும்இ ஆள்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிமைப்பட்டுக்கிடப்பதுமான நிலைகள் மாற வேண்டும். தமிழினம் தழைத்தோங்க அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள்:
அன்பிற்கினியத் தாய்த்தமிழ் உறவுகளே!
மூன்று தமிழர்களின் தூக்குஇ கூடங்குளப் பிரச்சனைகளில் தாங்கள் தன்னெழுச்சியாகப் போராடுவதைக் கண்டு பெருமிதம் கொண்டோம். தொடர்ந்து இதுபோன்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் சாதிஇ மதம்இ கட்சி உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுகிறோம்.
தேர்தல் காலங்களில் மட்டும் தங்கள் கால்களில் விழுந்துஇ வெற்றி பெற்றப்பின் தங்களின் கருத்தினைஇ பிரச்சனைகளைக் கருதாமல் தன்னலம்கொண்டு இயங்கும் மக்கள் பிரதிநிதிகளைக் கீழ்பணியச் செய்து மக்கள்பணியாற்றிடும் கட்டாயத்தை உருவாக்குங்கள். மாறானவர்களை முற்றிலும் புறக்கணித்து அவர்களை இயங்கவிடாமல் செய்யுங்கள். பொருளாதார வகைகளிலும் அரசுப்பணிகள்இ தொழில் துறைகளிலும் முன்னேறி வளங்கொண்ட தமிழகத்தை உருவாக்குங்கள். நமக்கான நாட்டினை நாமே உருவாக்குவோம்.
முல்லைப் பெரியாற்றை வென்றெடுப்போம்! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்!
நன்றி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக