கூகுள் தனது தளங்களின் தோற்றங்களை தற்பொழுது மாற்றி அமைத்து வருகிறது. Google Analytics, Blogger, Adsense, Feedburner இப்படி பல தளங்களின் தோற்றத்தை சமீப காலமாக மாற்றி அமைத்து வருகிறது. அந்த வரிசையில் ஜிமெயிலில் தற்பொழுது பல புதிய வசதிகளை கொண்ட தோற்றத்தை அறிமுகபடுத்தி உள்ளது. உங்களுக்கு இந்த புதிய மாற்றங்கள் தேவையென்றால்
உடனே மாற்றி கொள்ளலாம். எப்படி புதிய தோற்றத்தை பெறுவது என கண்டறிய கீழே தொடருங்கள்.
உடனே மாற்றி கொள்ளலாம். எப்படி புதிய தோற்றத்தை பெறுவது என கண்டறிய கீழே தொடருங்கள்.
முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து ஜிமெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். வலது பக்க கீழே பகுதியில் ஒரு Switch to the new look லிங்க் புதிதாக தெரியும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKzqXlz8c4IM9LFi4UoEBTqGml6TFHijQUA6tNQ4LOi1wRxGkYcs4JbJoIYOTChhK4rz45K1Hly5BIYB890vl9kTmbqIyHyLOKiICctibJJNWaOKA7lkxDa9WDxObouNmZUsbAuElcheZk/s400/Switch+to+the+new+look.png)
- அந்த லிங்க் மீது கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்த உடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ வரும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2iEjlffbf8mcWs23aaYu_UqVt_zJ-0V1N5YIJpY0hlUB_2602kTWMOs7x6H5PaTdQqGkMqHCup4rWd8hUvjqNa9TB2Tlpf1msKWTkzG8nVjsWfRPGsQUKPvrFLHb8pbGFBISmFX0DjTZg/s400/Switch+to+the+new+look2.png)
- இப்பொழுது உங்களின் ஜிமெயில் கணக்கு புதிய தோற்றத்தில் மாறி இருக்கும் உங்களுக்கு வரும் விண்டோவில் உள்ள Continue to the New look என்ற பட்டனை அழுத்தினால் புதிய தோற்றத்துடன் உங்களின் ஜிமெயில் கணக்கு வந்துவிடும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKc4SXMsLxiowkRyP5lfX4-WLdmI3i0Wdw7bu4lcTn8-g_wI2DTeB4X3G3g4Fj-B-J6Nf1vFDW2guijmJGhj_SmUb7w3pQY2AmjeGN5GEmVpBWluk3Q68KEqmoJrfpJRwlMjL36sVfnve4/s1600/newlook_new.png)
புதிய தோற்றத்தில் உள்ள வசதிகள்:
புதிய வசதிகள் என்ன உள்ளது என சுலபமாக அறிய கீழே உள்ள வீடியோவை
பாருங்கள்.
மற்றும் கீழே உள்ள Screenshot பாருங்கள். Reply மற்றும் Forward வசதிகள் புதிய முறையில் தெரிகிறது பாருங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக