பிரான்ஸின் பிரபல நையாண்டி தாக்குதல் நடத்தும் பத்திரிகையான 'சார்லி
ஹெப்டோ' மீது இனந்தெரியாத நபர்கள் இன்று பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் அலுவலகத்திலிருந்த அனைத்து பெறுமதியான பொருட்களும் நாசமாகியுள்ளதாகவும், இனிமேல் எந்தவித பதிப்பும் பிரசுரிக்கமுடியாத நிலை தோன்றியுள்ளதாகவும்
குறித்த பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.தமது அடுத்த பிரதிக்கு, முஹம்மது நபி அவர்களே, எழுத்து இயக்குனராக இருப்பார் என நகைச்சுவையுடன், நேற்று சார்லி ஹெப்டோ வாராந்திரபத்திரிகையில் ஒரு தகவல் வந்திருந்தது. இதற்கு மறுதினம் (இன்று) இப்பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
துனிசியாவில் இஸ்லாமிய கட்சியின் சட்டமன்ற தேர்தல் பெற்ற மாபெரும் வெற்றியை குறிப்பிட்டே இப்பத்திரிக்கை இப்படி நகைச்சுவையாக தகவல் வெளியிட்டிருந்தது. மேலும் அட்டைப்படத்தில், 'நீங்கள் சிரித்து சிரித்து இறக்காவிடின் உங்களுக்கு 100 கசையடிகள்' என நபி அவர்கள் கூறுவதுபோலவும் உள் பக்கங்களில், கோமாளிகளின் சிவப்பு மூக்கு அடையாளங்களுடன் நபியை குறிப்பிட்டு வரையப்பட்ட கார்ட்டூன்களுமே, இத்தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இது ஊடக சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் என பிரான்ஸ் பிரதமர் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இப்பத்திரிகையின், பிரதான ஆசிரியர் ஸ்டீபன் ஷர்போனீர் கருத்து தெரிவிக்கையில், இந்த தாக்குதல் பிரான்ஸில் உள்ள இஸ்லாமியர்களால் மேற்கொள்ளப்பட்டது என கூற மாட்டேன். ஆனால் முட்டாள் முற்போக்கு சிந்தனையுடையவர்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக