தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.10.11

உள்ளாட்சித் தேர்தல்-அதிமுக அமோக வெற்றி-10 மாநகராட்சிகள், பெருவாரியான நகராட்சிகளைப் கைப்பற்றியது!

சென்னை: தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலி்ல அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. 10 மாநகராட்சிகளையும் அது கைப்பற்றியுள்ளது. பெருவாரியான நகராட்சிகளையும் அதிமுக தன்வசப்படுத்தியுள்ளது. பேரூராட்சிகளையும் அது
பெருமளவில் கைப்பற்றியுள்ளது. 
திமுக பெருவாரியான இடங்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் மகா மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. ஒரு நகராட்சித் தலைவர் பதவியைக் கூட அது கைப்பற்றவில்லை.

தேமுதிகவுக்கும் இத்தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி 3வது பெரிய அரசியல் கட்சி என்ற பெயரை எடுத்தது மட்டுமே அக்கட்சிக்கு இந்தத் தேர்தலில் கிடைத்த ஒரே லாபமாகும்.

கடைசியாக அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி திருச்சி, நெல்லை, ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் ஆகிய மாநகராட்சி மேயர் பதவிகளை அதிமுக கைப்பற்றியுள்ளது. சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளிலும் அதிமுகவே முன்னணியில் உள்ளது.

முன்னதாக தமிழகம் முழுவதும் மொத்தம் 822 மையங்களில் எண்ணும் பணி தொடங்கியது. ஊரகப் பகுதிகளில் 400 மையங்களிலும், நகர்பப்பகுதிகளில் 422 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள் அதற்குட்பட்ட 820 வார்டுகள், 125 நகராட்சிகள், 3697 நகராட்சி வார்டுகள், 629 பேரூராட்சிகள், 8303 பேரூராட்சி வார்டுகள், 31 மாவட்ட ஊராட்சிகள், 655 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 6471 ஒன்றிய வார்டுகள், 12524 கிராம ஊராட்சிகள், 99333 கிராம ஊராட்சிகளுக்கான வார்டுகள் ஆகிய 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு 2 கட்டமாக தேர்தல்கள் நடைபெற்றன. இந்த பதவிகளுக்கு மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 767 பேர் போட்டியிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு கட்டங்களையும் சேர்த்து பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 78.5 சதவீதமாகும். முதல் கட்டத் தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை சென்னை குறைவான அளவாக 51.63 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாயின. வேலூர் மாநகராட்சியில் தான் அதிகபட்சமாக 71 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

நகராட்சி நிலவரம்

மாலை 5.30 மணி நிலவரப்படி முடிவு அறிவிக்கப்பட்ட 110 நகராட்சித் தலைவர் தேர்தல் முடிவுகளில் அதிமுக 82 இடங்களிலும், திமுக 17 இடங்களிலும் வென்றிருந்தன.

சுயேச்சைகள் 4 இடத்தையும், சிபிஎம், பாஜக, தேமுதிக தலா 2 இடங்களையும் கைப்பற்றியிருந்தனர். மதிமுகவுக்கு ஒரு இடம் கிடைத்தது.

காங்கிரஸுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை.

0 கருத்துகள்: