தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.11

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தக திருவிழா

மதுரை, செப். 4-  தென்னிந்திய பதிப்பாளர் சங்கம் சார்பாக மதுரையில் 10 நாள் புத்தக திருவிழா நடைபெறுகிறது. மதுரை தமுக்கம் மைதானத்தில் 02.09.2011 அன்று முதல் 11.09.2011 அன்று வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில், சுமார் 1 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 10 கோடி ரூபாய் விற்பனை ஆகும் என்று பதிப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இலக்கியம், கதை, கட்டுரைகள், நாவல், ஆன்மீகம், விஞ்ஞானம், மற்றும் அரசிய
ல், மருத்துவம், சமையல் குறிப்புகள், உட்பட பல்வேறு பிரிவுகளில் பயனுள்ள் நூல்கள் வாசகர்களுக்கு விருந்தாக வைக்கப்பட்டுள்ளன.
காலை 11 முதல் இரவு 10 வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவை, நல்லி குப்புசாமி 02.09.2011 அன்று காலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் சகாயம் தலைமை உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தமிழறிஞர் தமிழ் அண்ணல் கலந்துகொண்டார். புத்தகத்திருவிழா தொடங்கிய முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பெருமளவில் வந்திருந்து பயனுள்ள புத்தகங்களை ஆவலுடன் வாங்கிச் செல்கின்றனர்.
கிட்டத்தட்ட 500 க்கும் மேற்பட்ட பதிப்பகத்தார்கள் தங்களது அரங்குகளை அமைத்திருக்கின்றனர். ரூபாய் 35 முதல் 5000 வரையிலான விலையில் பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. அவை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கான பாடல்கள், யோகா கற்றுத்தரும் குறுந்தகடுகளும் கண்காட்சியில் கிடைக்கும். கோவை தகிதா பதிப்பகத்தின் நூல்கள் அரங்கு எண் 15ல் அமைந்துள்ள வாசல் பதிப்பகத்தாரின் அரங்கில் கிடைக்கும்.

0 கருத்துகள்: