வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பில், பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட சிறிலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தின் பிரதிகள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிங்ரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் என்ற அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அமைப்பு ஒன்று சிறிலங்காவின் கொலைக்களம் படத்தை அனுப்பிவைத்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தயில் இந்த ஆவணப் படம் அண்மையில் திரையிடப் பட்டதைத் தொடர்ந்து அதனை அமெரிக்க அதிபருக்கு அனுப்பி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்புத் தெரிவித்துள்ளது.
‘இந்த ஆவணப்படம் ஸ்ரீலங்கா அரசின் செயற்பாடுகளை விவரிக்க போர்க் குற்றம் என்கின்ற சொற்பதத்தைப் பயன் படுத்துகிறது. நாம் இந்த விவரணப் படத்தை எம்மால் தொடர்புகொள்ள முடிந்த எல்லா முக்கிய நபர்களுக்கும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய நபர்களுக்கும் வழங்கி வருகிறோம். சிறிலங்காவின் கொடூரங்கள் பரந்து பலதரப்பட்ட மக்களைச் சென்றடையும் போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழருக்கான தனியரசினை அமைப்பதற்கு ஆதரவைப் பெற்றுத் தரும் என்று அந்த அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக